tamilnadu

img

தரங்கம்பாடி பேரூராட்சி அமைத்த குறுங்காடு

தரங்கம்பாடி, ஆக.23- திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தி பிளாஸ்டிக் ஒழி ப்பில் முன்மாதிரியாக செயல்பட்டு வீணாகும்  பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை தரம்  பிரித்து அதை விலைக்கு விற்றும் உரமாக வும் மாற்றி வருவாய் ஈட்டி வருகின்ற தர ங்கம்பாடி பேரூராட்சி 5 ஆயிரம் சதுர பரப்ப ளவில் குறுங்காடு அமைத்துள்ளது. தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொ றையார் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளா கத்தில்  அமைக்கப்பட்டுள்ள குறுங்காடு தோட்டம் பொதுமக்களின் ஈர்ப்பை பெற்று ள்ளதோடு, பல்வேறு தரப்பினரின் பாராட்டை யும் பெற்றுள்ளது. டெல்டா மாவட்டங்களில் குறுங்காடுகள் அமைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வரும்  வனம் தன்னார்வ அமைப்பு இதற்கான வழி காட்டுதல்களை வழங்கி இத்திட்டத்தை செய ல்படுத்தியது. அகிரா மியாவாக்கி என்னும்  ஜப்பான் தாவரவியலாளர் அறிமுகப்ப டுத்திய மியாவாக்கி முறை யில் மூன்று அடி ஆழத்திற்கு பூமியைத் தோண்டி அதில் மர க்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

 பேரூராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை பரப்பி மண்ணால் மூடி மக்க செய்து அதன் மேற்பரப்பில் இரண்டு அடிக்கு ஒன்றாக 17 வகையான நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. புங்கன், வேம்பு, உசிலை, நீர்மருது, செண்ப கம், சிசு,வாதாம், நாவல், கொடுக்காபுளி, பலா, கொய்யா, பூவரசு, இலுப்பை, பெரு நெல்லி, விலா, நல்லத்தி, மந்தாரை ஆகிய 17  வகையான பலன் தரும், நிழல் தரும் மரக்க ன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கு தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித்  தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சுப்ர மணியன் முன்னிலை வகித்தார். திடக்க ழிவு மேலாண்மைத் திட்ட மேற்பார்வையா ளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வனம் தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். திட்டம் பற்றி வனம் கலைமணி விளக்கினார். வனம் அறங்காவலர் பொன். நடராஜன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

;