tamilnadu

சட்டப் பயிற்சி பெற்ற அதிகாரிகளை ஆணையரகத்தில் நியமிக்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, ஆக.28- மாற்றுத்திறனாளிகள் குறித்த சட்டப்  பயிற்சி பெற்ற அதிகாரிகளை ஆணையர கத்தில் நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலா ளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் முதலமைச்சர்,  தலைமைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள்  துறைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம்  அனுப்பியுள்ளனர். அதன் சுருக்கம் வருமாறு: மத்திய அரசு, மோட்டார் வாகன திருத்த  சட்டத்தின்படி பேருந்துகளில் மாற்றுத்திற னாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகை யில் முன்னுரிமை இருக்கைகள், சக்கர நாற்  காலிகள் வந்து செல்ல வசதியான நுழை வாயில், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்  களை பாதுகாப்பாக வைப்பது, கைப்பிடி கள் அமைப்பது, சைன் அறிவிப்பு ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதனை தமிழகத்தில் நடைமுறைப்ப டுத்த உத்தரவிட வலியுறுத்தி 2019 டிசம்பர்  31 அன்று சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு  மனு அனுப்பினோம். இதற்கு “மோட்டார்  வாகன திருத்த சட்டபடி தனியார் மற்றும்  அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளி களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது என்பது  அரசின் கொள்கை முடிவுக்குட்பட்டதாகும்” என மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் பதில் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அனைத்து போக்குவரத்து சாதனங்களும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திட அணு கத்தக்க மற்றும் பாதுகாப்பான வகையில் வடிவமைக்க வேண்டும் என ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்(2016) கூறுகிறது. ஆனால்,  5 ஆண்டுகளாகியும் இச்சட்ட விதிகளை போக்கு வரத்துத் துறை அமல்படுத்தவில்லை. இதனை மாற்றுத்திறனாளிகள் ஆணையரக மும் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கவில்லை.  அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளி கள் சட்ட உரிமைகளை நடைமுறைப்ப டுத்த வலியுறுத்த வேண்டிய ஆணையரகமே,  சட்ட விதிகளை அமல்படுத்த மாட்டோம் என கூறுவதாக கருத வேண்டியுள்ளது. விழிப்புணர்வும் பயிற்சியும்

மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம் குறித்த ஒரு முழு பார்வை மாற்றுத்திறனாளி ஆணையரக அதிகாரிகளுக்கே இல்லை.  2016 சட்டம் குறித்து பல்வேறு மட்ட அதி காரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் உரிய பயிற்சி கட்டாய மாக அளிக்கப்பட வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் பிரிவு 39  மற்றும் 47 கூறுவதை தமிழக அரசு செய்ய வில்லை. இதன் காரணமாகவே இது போன்ற தவறுகள் ஏற்படுகின்றன. எனவே, மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி களை உறுதிப்படுத்தி பேருந்துகள் தயாரிக்க வும், தவறு செய்கிற துறை அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கவும், மாற்றுத்திறனாளி கள் சட்டம் மற்றும் ஐ.நா. உடன்படிக்கை குறித்து நன்கு அறிந்த நபர்களை ஆணை யர் உள்ளிட்ட அதிகாரிகளாக பணியமர்த் திட வேண்டும் இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

;