tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சீர்காழி. மே 8- கொரோனா ஊரடங்கு நிவாரண மாக ரூ.5 ஆயிரம் கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் 6 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் சீர்காழி நகர பொருளாளர் சுரேஷ் குமார் தலைமையிலும், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி அலுவலகத்தில் வட்ட செயலாளர் ஆர் .நீலமேகம் தலைமையிலும், எடக்குடி வடபாதி கிராம நிர்வாக அலுவலகத்தில் கிளை செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலும், கதிராமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நாகராஜ் தலை மையிலும், திருப்புன்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் முருகன் தலைமையிலும், கற்கோயில் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஏ.ராஜ் தலைமையிலும் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பில் 54 இடங்களில் போராட்டம் நடை பெற்றது. தஞ்சை வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட செயலா ளர் பி.எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சி. ராஜன் முன்னிலை வகித்தார். ஆலக்குடியில் மாவட்ட துணைச் செயலாளர் கிறிஸ்டி, குருங் குளத்தில் ஒன்றியப் பொருளாளர் ராதிகா, அம்மாபேட்டையில் ஒன்றி யச் செயலாளர் ரவி, கோவிலூரில் சத்தியா, ராராமுத்திரைக் கோட்டை யில் ரவி கலந்து கொண்டனர்.  ஒரத்தநாடு ஒன்றியத்தில் 4 இடங்களிலும், திருவோணம் ஒன்றியத்தில் இருபத்தோரு இடங்க ளிலும் போராட்டம் நடைபெற்றது. வெட்டுவாக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார். 

திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணைத் தலைவர் சுகுமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பூதலூர் ஒன்றியம் வெண்டயம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லெட்சுமணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  சேதுபாவாசத்திரம் ஊராட்சி அலுவலகத்தில், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஜலீல் தலை மையில் போராட்டம் நடைபெற்றது. அம்மாபேட்டை ஒன்றியம் ராரா முத்திரைக்கோட்டை, கோவிலூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றிய செய லாளர் ஏ.நம்பிராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி, மாற்றுத் திறனாளிகள் சங்கம் ரவி கலந்து கொண்டனர்.  அதிராம்பட்டினத்தில் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் அ.பஹாத் அகமது கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

;