சீன ஓபன் பேட்மிண்டன்
சீனாவின் முக்கிய நகரான புஸ்ஹாவில் விக்டர் ஓபன் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிகம் எதிர்பார்த்த இந்தியா வின் சிந்து, சாய்னா முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்த நிலை யில், வியாழனன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பருப்பள்ளி காஷ்யப், சாய் பிரணீத் ஆகியோர் தொடரிலிரு ந்து வெறுங்கையோடு வெளியேறினர்.
அதிரடிக்கு பெயர் பெற்ற அக்ஸெல் சென்னிடம் பருப்பள்ளி காஷ்யப் 13-21, 19-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இதே போலச் சாய் பிரணீத் டென்மார்க்கின் ஆன்டோசென்னிடம் 20-22, 22-20, 16-21 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் தோல்வி யைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கி ரெட்டி, அஸ் வினி பொன்னப்பா ஜோடி தென் கொரியாவின் சியோ சியாங் - யு ஜுங் ஜோடியிடம் 21-23, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியை ருசித்துள்ளது. பேட்மிண்டன் துறையில் சிறப்பாகச் செயல்படும் இந்திய நட்சத்திரங்கள் அடுத்தடுத்து வெளியேறி வருவதால் இந்திய ரசிகர்கள் சோர்வுடன் உள்ளனர்.