tamilnadu

img

சாய்னாவும் அவுட்

சீன ஓபன் பேட்மிண்டன்

சீனாவின் முக்கிய நகரான புஸ்ஹாவில் விக்டர் ஓபன் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. 

ஆடவர் ஒற்றையர்

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான பருப்பள்ளி காஷ்யப், தாய்லாந்து நாட்டின் சித்திகோம்மை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காஷ்யப் 21-14, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத், அதிரடிக்குப் பெயர் பெற்ற இந்தோனேசியாவின் டாமி சுகியார்டோவை 15-21, 21-12, 21-10 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.  

மகளிர் ஒற்றையர் 

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்க மங்கை வெளியேறிவிட்ட நிலையில்,  அதிகம் எதிர்பார்த்த சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சீனாவின் காய் யான்னை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே புள்ளிகளைக் குவிக்கத் திணறிய சாய்னா 9-21, 12-21 என்ற செட் கணக்கில் படுதோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.