tamilnadu

img

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 பெரம்பலூர், ஜூலை 21- பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஹன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் தனி யார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிறன்று நடை பெற்றது. முகாமில் 109 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவன ஊழியர்களை தேர்வு செய்தன. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன், தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி னார். வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குநர் பாலமுரு கன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.