tamilnadu

img

பெரம்பலூர்: இன்று விவசாயிகள் மறியல்

பெரம்பலூர், ஜன.7- தேசிய விவசாய சங்கங்க ளின் கூட்டமைப்பின் சார்பில் நடை பெறவுள்ள நாடு தழுவிய விவ சாயிகள் மறியல் போராட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் வெற்றி கரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்ப ரம் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை ஆகியோர் தலைமையேற்றனர். விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் எ.கே.ராஜேந்திரன், பி.மாணிக்கம், டி.எஸ்.சக்திவேல், எ.மணி, வரத ராஜ், கே. துரைராஜ், சின்னசாமி, எஸ்.கே.செலலக்கருப்பு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  மத்தியில் ஆளும் பி.ஜே.பி மோடி அரசு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி விவசாய விளைபொருளுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரைப்படி உற்பத்தி செலவை கணக்கிட்டு கூடுதலாக 50 சதவீத விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்தும், நாடுமுழுவதும் உள்ள கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ததைப் போல விவசாயிகள் இயற்கை சீற்றங்க ளால் பாதிக்கப்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை செய்யும் நிலையிலுள்ள விவசாயி கள் கடனை தள்ளுபடி செய்ய வலி யுறுத்தியும், ஏற்கனவே தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப் படும் பயிர்க்கடனுக்கும், நகைக் கடனுக்கும் வட்டி மானியத்தை அறவே ரத்து செய்தது மட்டுமில்லா மல் வட்டியை 11 சதவீதமாக உயர்த்தி யதை கண்டித்தும், வேர் அழுகல் நோயால் கடுமையாக பாதிப்ப டைந்துள்ள சின்னவெங்காய விவ சாயிகளுக்கு இயற்கை பேரிடர் நிவா ரண நிதியிலிருந்து மத்திய,மாநில் அரசுகள் உடனடியாக நஷ்ட ஈடு வழங்காததை கண்டித்தும், இதேபோல 2015-2016, 2016-2017ஆம் ஆண்டுகளில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கரும்பு பணப் பாக்கி தொகையான ரூ.32 கோடியை வழங்காததை கண்டித்தும், பெரம்ப லூர் சர்க்கரை ஆலையில் கையி ருப்புள்ள சர்க்கரை முழுவதையும் ஒரே நேரத்தில் விற்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றுக்கொ டுக்காத தமிழக அரசை கண்டித்தும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யத்தில் 8 புதன் காலை 10 மணிக்கு விவசாயிகள் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.  மேற்கண்ட கோரிக்கைகளை விளக்கி ஜனவரி 4ஆம் தேதி பெரம்பலூர் ஒன்றிய கிராமங்களி லும், ஜனவரி 5ஆம் தேதி ஆலத்தூர் ஒன்றிய கிராமங்களிலும், ஜனவரி 6ஆம் தேதி வேப்பூர் ஒன்றிய கிரா மங்களிலும் விவசாய சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேன் பிரச்சாரம் செய்யப்பட்டது.  மத்திய, மாநில அரசுகளின் விவ சாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தும் நடைபெறும் மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டுமென விவசாய சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரமும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்ல துரையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;