tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

தியேட்டர்களை திறக்கிறது கர்நாடகம்..
பெங்களூரு:

பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை முதலில் திறந்து விட்ட மாநிலம் என்றால் அது கர்நாடகம்தான். கோயில்களை திறக்கவும் முடிவு செய்துள்ளது. அதையும் தாண்டி தற்போது சினிமா தியேட்டர்கள், மால்கள் போன்றவற்றையும் திறந்துவிடப் போவதாக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அவர்களின் அனுமதி கிடைத்தபின், மே 31-க்குப்பின் தியேட்டர்கள், மால்கள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனாவை ‘ஒழிக்க’ நரபலி வாங்கிய பூசாரி!
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கில் அமைந்துள்ள பிராமணி தேவிகோவி லில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா (72). இவர் 2 நாட்களுக்கு முன்பு, 52 வயது நபரைகோவிலுக்குள் அழைத்து வந்து அவரின் தலையை துண்டாக வெட்டி பலி கொடுத்துள்ளார். பின்னர்நேராக காவல்நிலையத்து க்கு சென்று சரணடைந்துள்ளார். போலீசார் அவ ரிடம் விசாரித்தபோது, கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர, நரபலி கொடுக்குமாறு, கடவுள் தன்னிடம் கூறியதாகவும், அதனால் அந்த நபரின் தலையை வெட்டியதாகவும் ஓஜா அதிர்ச்சி அளித்துள்ளார்.

தப்லீக் ஜமாத் தலைவர் மீதுசிபிஐ விசாரணை
புதுதில்லி:

மே மாதத் துவக்கத்தில், தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தப்லீக் ஜமாத் உறுப் பினர்களின் நிதி தொடர்பான பல ஆவணங்களை சேகரித்த துடன், ஜமாத் தலைவர் மவுலானா சாதின் 5 நெருங்கிய நண்பர்களின் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்தது. இந்நிலையில், மவுலானா சாத் வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் தில்லி காவல்துறையின் குற்றப்பிரி விலிருந்து, மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) கேட்டுள்ளது.

நடமாடும்  கொரோனா  சோதனை மையம்!
மும்பை:

இதுவரை 59 ஆயிரத்து 546 பேர் பாதிக்கப்பட்டு, நாட்டி லேயே அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில் ஐஐடி அலுமினி கவுன்சில், மும்பை மாநகராட்சி, கே.ஆர்.எஸ்.எஸ்.என்.ஏ.சோதனை அமைப்பு ஆகியவை ஒன்றாக இணைந்து நடமாடும் கொரோனா சோதனைமையத்தை நிறுவி யுள்ளன. ஜாவா ஆட்டோ மொபைல் நிறுவனம் இந்தச் சோதனை மையத்தை ஆம்னி பேருந்து போன்று வடிவமைத்துக் கொடுத்துள்ளது.