tamilnadu

img

சொப்னா, சந்தீப் நாயர் பெங்களூருவில் கைது...

பெங்களூரு/கொச்சி:
அரசுமுறை பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள கோரமங்களாவில் சனியன்று இரவு கைது செய்தனர். அவர்களிட மிருந்து பாஸ்போர்ட்டும் இரண்டரை லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டன. சாலை வழியாக கொச்சிக்கு அழைத்து வந்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவிலிருந்து சொப்னாவும், சந்தீப் நாயரும் நாகாலாந்துக்கு தப்பிக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தீபுக்கு நாகலாந்தில் தொடர்பு உள்ளது. சொப்னாவின் பாஸ்போர்ட்சந்தீபிடம் இருந்தது. மாருதி எஸ் கிராஸ்காரில் இவர்கள் கர்நாடகத்திற்கு வந்துள்ள னர். சொப்னாவின் கணவரும் இரண்டு குழந்தைகளும் உடனிருந்தனர். என்ஐஏவின் ஹைதராபாத் கிளையில் உள்ள பெங்களூரு குழுவினர்  பெங்களூரு ஆக்டேவ் ஓட்டலில் இருந்து சனியன்று இரவுஏழு மணியளவில் அவர்களை கைது செய்தனர். ஞாயிறன்று காலை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு கொச்சிக்கு புறப்பட்டனர். பிற்பகல் கொச்சிஅலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சந்தீபின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.  

சொப்னாவும் சந்தீபும் பெங்களூருவுக்கு வெள்ளியன்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு என்ஐஏவிடம் சிக்கி உள்ளனர். குடும்பத்துடன் தலைமறைவான சொப்னாவின் மகளது செல்பேசி சனியன்று மதியம் செயல்பட்டதைத் தொடர்ந்து அவர்களது இருப்பிடத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர். அடை யாளம் தெரியாமல் இருக்க சொப்னாவும் சந்தீபும் முகத்தோற்றத்தில் மாற்றங்கள் செய்திருந்ததாகவும் தகவல் உள்ளது.  

;