tamilnadu

img

ஒடிசா, கோவா மாநிலத்திலும் 12 மணி நேரம் வேலை...

புவனேஸ்வர்:
கொரோனா நெருக்கடியை வைத்து, தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் வேலையில்மத்திய - மாநில அரசுகள் இறங்கியுள்ளன. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட
பாஜக ஆளும் மாநிலங்கள் வேலைநேரத்தை 12 மணிநேரமாகஅதிகரித்துள்ளன. கூடுதல் 4 மணிநேரத்திற்கு மிகை ஊதியம் வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளன.அந்த வரிசையில், தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 8-இல் இருந்து 12 மணி நேரமாக அதிகரித்து, நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில பிஜூ ஜனதாதள அரசும் அராஜகத்தில் இறங்கியுள்ளது.

தொழிற்சாலை விதிகள் 1948- இன் கீழ்வரும் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஒடிசாஅரசு அனைத்து தொழிலாளர்களுடைய பணி நேரத்தை 12 மணிநேரமாக மாற்றி அமைக்கிறது. அதாவது, வயதுவந்த ஒரு தொழிலாளி, பணியின் முற்பகுதியில்6 மணி நேரத்துக்குக் குறையாமலும், இடைவேளைக்குப் பின் பிற்பகுதியில் 6 மணி நேரமும் பணிபுரிய வேண்டும். இந்த 6 மணிநேரத்துக்கு இடையில் குறைந்தது
அரைமணி நேரம் இடைவேளை விடப்படுகிறது. மொத்த பணிநேரம் இடைவேளையுடன் சேர்த்து13 மணி நேரத்துக்கு உள்ளாக இருக்க வேண்டும் என்று உத்தரவுபிறப்பித்து உள்ளது.

ஒடிசா அரசின் இந்த முடிவுக்கு,மாநில சிஐடியு தலைவர் ஜனார்த்தன் பதி கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த வேலை நேரம் அதிகரிப்பு நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.  ஏற்கெனவே ஊரடங்கால் துயருற்றுள்ள தொழிலாளர்களை மேலும் 4 மணி நேரம் பணிபுரியச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. வாரத்துக்கு 72 மணி நேரப் பணிதொழிலாளர்களின் உடல்நிலையைச் சீர்கெடச் செய்யும்” என்று அவர் கூறியுள்ளார்.இதனிடையே பாஜக ஆளும்கோவா அரசும் வேலைநேரத்தை 12 மணிநேரமாக அதிகரித்துள்ளது.

;