tamilnadu

img

நாடு முழுவதும் கிளர்ந்தெழும் போராட்டம் - ஏ.லாசர்

ஜுன் 4ஆம் தேதி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் மனுக்கள் கொடுப்பது என்று முடிவு செய்து கிராமப்புற விவசாயத் தொழிலாளர்க ளை தெருத்தெருவாக சட்டவிதிகளுக்கு உட்பட்டு திரட்டிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அகில இந்திய தொழிற் சங்க மையமும்(சிஐடியு) அகில இந்திய விவசாயிகள் சங்க மும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

பல கோடி விவசாயத் தொழிலாளர்களையும், கோடிக் கணக்கான இடம்பெயர்ந்து வாழும் உழைப்பாளிகளையும் கொண்ட நாடு நம்நாடு. அதனால்தான் இதை ஏழைகளின் தேசம் என்றார்கள். மோடியும் அவரது துதிபாடிகளும் ஆயிரம் பேசினாலும் அவதார புருஷர் மோடி வந்த பின்பு தேசமே மாறிவிட்டது, இங்கு ஏழை இல்லை, ஏழ்மை இல்லை, சுயபொருளாதாரத்தில் முன்னேறிவிட்டோம் என்று கூரையில் ஏறி நின்று கூப்பாடு போட்டாலும் நமது நாட்டின் எதார்த்த நிலைமை பொதுமுடக்கப் பிர கடனத்திற்குப் பின்பு தேசமே ஆட்டம் கண்டு அல்லாடி நிற்கிறது. வேலையில்லை, வருவாய் இல்லை, பசியைப் போக்கிட வழியுமில்லை என்று 70 நாட்களாக அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் கோடிக்கணக்கான நகர்ப்புற, கிராமப்புற ஏழை மக்கள்.

ஏற்கெனவே வறுமையில் வாடும் மக்களுக்கு வயிற்றுப் பசியை போக்கிட வழியைக் கூறாமல் ஆட்சியாளர்கள் அறி வித்த ஊரடங்கு மக்களின் வாழ்வோடு வறுமை விளை யாட ஆரம்பித்தது. மார்ச் மாத இறுதியில் மோடி ஊரடங்கை பிரகடனப்படுத்தினார். ஊரடங்கை அவசரமாக அறிவித்த தன் விளைவு மே மாத இறுதியில் நாடு முழுவதும் மக்கள் பொங்கி எழுந்து போராடியதை நாம் பத்திரிகைகளிலும், காணொளிக் காட்சிகளிலும் கண்டோம். 

4 கோடிக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் இடம் பெயர்ந்து வேறு மாநிலத்திற்கு பிழைக்கச் சென்றவர்கள். அங்கே வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் பிறந்த மண் ணிற்காவது திரும்பிச் செல்வோம் என்று முடிவெடுத்தனர். 

அதற்கு வாகனங்கள் இல்லை, நடந்தால் பசியைப் போக்கிட பணமும் இல்லை, அதையும் மீறி பல நூற்றுக் கணக்கான மைல்கள் நடந்தே சென்று  பசியினால் மயங்கி விழுந்து செத்த காட்சிகள் இந்தியாவின் அவல வர லாறாக எழுதப்பட்டுவிட்டது. அந்தந்த மாநிலத்தில் இருக்கக் கூடிய கோடிக்கணக்கான விவசாயிக் கூலித் தொழிலாளி கள் கூலி வேலை இல்லை, கிடைத்து வந்த நூறு நாள் வேலையும் நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் ஏற்பட்டுள்ள  வறுமை நிலையை எதிர்கொள்ள ஆட்சியாளர்கள் எந்தப் பொருளாதார உதவிகளும் வழங்காமல் வாய்ப்பந்தல் மூலம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள். 

 பாதித்த மக்களுக்கு எந்த நேரடியான பொருளாதார உதவிகளையும் மத்திய ஆட்சியாளர்கள் செய்யவில்லை. மாநில ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும் என்று மட்டும் உத்தரவிட்டார்கள். மாநில ஆட்சியாளர்கள் செய்த உதவி யானைப் பசிக்கு சோளப்பொரியாக இருந்ததே தவிர, உதவிடும் விதத்தில் பசியைப் போக்கிடும் விதத்தில் அமைய வில்லை. எங்கு பார்த்தாலும் மக்கள் அரசினுடைய உதவி யையோ அல்லது சில அமைப்புகளின் உதவியையோ, தனி நபரின் உதவியையோ எதிர்பார்த்து கையேந்தி நிற்கும் நிலை நாடு முழுவதும் இருந்ததை  காண முடிந்தது. சுதந்தி ரம் அடைந்து 70ஆண்டுக்குப் பின்பு நமது தேசத்தின் உண்மை நிலைமையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது ஆட்சியாளர்கள் செய்த நடவடிக்கை.

அதனால்தான் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) போன்ற அமைப்புகளும், இடதுசாரிக் கட்சிகளும், மதச்சார்பற்ற கட்சிகளும் பல வெகு ஜன அமைப்புகளும் பசித்த வயிற்றுக்கு முதலில் உணவு ஏற்பாட்டை உருவாக்குங்கள், மாதந்தோறும் அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். உணவுப் பொருட்க ளை வழங்கிட வேண்டும், கொரோனா நோய் கண்டவர்களு க்கு அவசரகால மருத்துவ உதவியை செய்திட வேண்டும், இவைகளைச் செய்து கொண்டே விலகி நிற்பது விதியை பின் பற்றுவது என்ற உபதேசத்தை செய்தால் அது யதார்த்தமாக வும் இருக்கும், மக்களும் அரசு சொல்வதை பின்பற்றுவார் கள் என்று ஆட்சியாளர்களுக்கு பல முறை எடுத்துச் சொன் னார்கள். பல போராட்டங்கள் மூலமும் அரசினுடைய கவ னத்திற்கு கொண்டு சென்றார்கள். 

ஆனால் மோடி அரசோ, தமிழக அரசோ மக்களினு டைய இந்த நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளவில்லை.  கொரோனாவால் தேசத்தில் ஏற்பட்ட பொ ருளாதார பின்னடைவை சுயசார்பு கொள்கைகளின் மூலம் எதிர்கொள்வோம். அதற்காக 20 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளோம். எந்த நெருக்கடியையும் இந்திய அரசும் மோடியும் எதிர்கொள்வார்கள் என்று பிரகடனப் படுத்தினார்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாட்க ளாக 20லட்சம் கோடி ரூபாய்களை எப்படி எப்படியெல்லாம் செலவழித்து தேசத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போகிறோம், இந்தியாவை சொந்தக்கால்களில் நிற்க வைக்கப் போகிறோம், எவருடைய தயவும் எங்களுக்கு தேவையில்லை என்று கதாகாலசேபத்தை காணொளிக் காட்சியிலே நடத்தினார். 

ஆனால் 40 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை கள், நகர்ப்புற ஏழைகளுக்கு நேரடி பொருளாதார உதவி என்பதற்காக இவர்கள் ஒதுக்கிய நிதி ரூ.1.80 லட்சம் கோடி தான் என பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். அது வாரியங்களின் மூலமாக வழங்கக்கூடிய விபரங்கள், மருத்துவ உதவிகளுக்காக செலவிடக்கூடியவை, கிராமப் புற  நூறுநாள் வேலைத்திட்ட பணிகளுக்கு ரூ.40ஆயிரம் கோடி உட்பட இத்தொகையில் அடங்கும் என்று  தலைப்பு வாரியாக பிரித்து கூறினார்கள்.

மொத்தத்தில் 18லட்சம் கோடி ரூபாயை மத்திய அர சினுடைய புதிய பொருளாதாரத் திட்ட மேம்பாட்டு பணிக ளுக்காகவும் தனியார்மயத்தை பலப்படுத்துவதற்காகவும் தனியார் கார்ப்பரேட்காரர்களுக்கு சலுகை வழங்குவ தற்காக ஒதுக்கியுள்ளார்கள் என்று நாடறியச் செய்துவிட்டார் கள் நமது நாட்டுப் பொருளாதார வல்லுநர்கள். ஆனால் இதைப் பற்றி மோடி அரசோ, அவரது விசுவாசிகளோ கவலைப்படவில்லை. 

இன்று நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டி ருக்கிறது. கோடிக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர் கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வழியில்லா மல், ஆட்சியாளர்களிடமிருந்து பயணச் செலவிற்கும் காசுமில்லாமலும், வாகனங்களையும் பண உதவிகளை யும் எதிர்பார்த்து ஒவ்வொரு மாநிலங்களிலும் காத்துக்கிடக் கும் நிலையையும் கண்ணீரோடும், பசியோடும் போர்க் குரலை எழுப்பிக் கொண்டிருக்கும் காட்சிகளையும் நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரயில்வே பிளாட்பா ரங்களில் அனாதைப் பிணங்களாக கூலித் தொழிலாளர் கள் கிடக்கின்ற காட்சியும்,  தாய் செத்தது  தெரியாமல் தாயை சுற்றிச்சுற்றி வரும் குழந்தையின் கதறல் ஒலியையும் வீடியோக்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

இத்தகைய கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் எதார்த்தமான வாழ்க்கையும் வறுமையையும் மறைத்து விட்டு ஆட்சியாளர்கள் வீண் பெருமை பேசி நேரத்தையும், தேசத்தையும் வீணடித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்திட என்ன செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்து வதற்காகத்தான் ஜுன் 4ஆம்தேதி தேசந்தழுவிய போராட்டம்.

எனவே மத்திய அரசு,

  1. வேலையிழந்த காலங்களுக்கு மாதம் ரூபாய் 7,500 நிவாரணம் வழங்க வேண்டும். 
  2.  கிராமப்புற உழைப்பாளிகள், நகரப்புற உழைப்பாளி களுக்கு நூறுநாள் வேலைத்திட்டத்தை 200 நாள் வேலையாக அதிகரித்து சட்டக்கூலி ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
  3. ஜாப் கார்டு வைத்துள்ள (வேலை அட்டை) அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை வழங்கிட வேண்டும். 
  4. 60 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்கிட வேண்டும்.
  5. 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்-பெண் தொழிலாளி களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 2000ஆயிரம் வழங்கிட வேண்டும்.
  6. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான மாதாந்திர உணவுப் பொருட்களை (அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மளிகை பொருட்கள்) ஆறு மாத காலத்திற்கு மத்திய அரசும்- மாநில அரசும் வழங்கிட வேண்டும். 
  7. இதை செய்வதன் மூலம்தான் வறிய நிலையில் உள்ள மக்களை பாதுகாத்திட முடியும். 

இதைச் செய்யாமல் மோடியும், மோடியினுடைய மந்திரி களும், அவருடைய விசுவாசிகளும் கூரைமேல் ஏறி நின்று  இந்தியா முன்னேறி வருகிறது. சொந்தக்காலில் நிற்கிறது. சுயாதிபத்தியதோடு நிற்கிறது, வல்லமையும் வளமையும் கொண்ட நாடாக மாறியுள்ளது. வல்லரசு நாடாக மாறி வரு கிறது. மோடி வந்ததற்கு பின்பு இந்தியாவே தலைகீழாக மாறிவிட்டது. இந்தியா ஏழைகளின் நாடல்ல. உலகமே நம்மைக் கண்டு பொறமைப்படுகிறது. ‘மன் கி பாத்’ உரை யில் மோடி உலகறியச் செய்துவிட்டார்.  எனவே கோயில் கட்டி கும்பிட வேண்டிய தெய்வம் மோடி, அவருக்காக கோயிலை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறோம் என்று பிஜேபிக் காரர்கள் கூப்பாடு போடுவதன் மூலமாக தேசத்தின் எந்த மாற்றத்தை யும் கொண்டுவர முடியாது. கார்ப்பரேட்டுகளின் கையிலே தேசத்தை கொடுத்துவிட்டு, அவர்கள் தருகிற கரன்சிக ளுக்காக விசுவாசத்தோடு இவர்கள் செய்கிற நிர்வாக நடவடிக்கைகள், அரசாங்க சட்டத்திட்டங்கள் நமது நாட்டை எந்த வகையிலும் வல்லரசாக மாற்றாது. வறுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையைத்தான் இவர்கள் செய்வார்கள்.

கட்டுரையாளர்: அகில இந்திய விவசாயத் 
தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர்