tamilnadu

img

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் கூட்டத்தில் ஜாமீனில் வெளிவந்த கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள்

உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட தேர்தல் கூட்டத்தில் முதல் வரிசையில் ஜாமீனில் வெளிவந்த முகமது இக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் உள்ள பிஷாரா கிராமத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், கவுதம்புத் நகர் தொகுதியில் போட்டியிடும் மகேஷ் சர்மா என்ற வேட்பாளருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், முகமது இக்லக் என்ற முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முதல்நிலை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விஷால் சிங் மற்றும் 16 பேர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.


கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி பிஷாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது இக்லக் என்ற முஸ்லிம் பசு இறைச்சியை வைத்திருந்ததாக அவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து பசுக்குண்டர் படை தாக்கிக் கொலை செய்தது.


இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விஷால் சிங், பிற்பாடு தான் எதுவுமே செய்யவில்லை தன் மீது பொய் வழக்குப் போட்டதாகத் தெரிவித்தார். இப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் வெளியில் வந்தவிட்டனர்.


இந்நிலையில் இக்லக் கொல்லப்பட்ட இதே கிரமாத்தில் யோகி ஆதித்யநாத் கூட்டத்தின் முதல் வரிசையில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் சிங் மற்றும் 16 பேர் அமர்ந்து ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


;