லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநில அரசு, அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதற் காக புதிய திட்டத்தை அறிவித்துள் ளது. உத்தரப்பிரதேச டிஜிட்டல் கொள்கை, 2024 என்ற பெயரில் அறி விக்கப்பட்டுள்ள அந்த திட்டத்தில், “மாநில அரசின் திட்டங்கள், சாத னைகளின் அடிப்படையில் உள்ள டக்கம், வீடியோக்கள், டுவீட்கள், இடுக்கைகள், ரீல்ஸ்களை டிஜிட் டல் ஊடகங்களில் காட்டுவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். பட்டியலிட்ட ஒவ்வொரு டுவிட்டர் எக்ஸ், முகநூல், இன்ஸ்டாகிராம், மற்றும் யுடியூப் ஆகியவை சந்தா தாரர்கள் பின்தொடர்பவர்கள் (பாலோவர்ஸ்) அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆபரேட்டர்கள்/செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு வகை வாரி யாக பணம் செலுத்துதல் அதிகபட்ச கட்டண வரம்பு முறையே மாதம் ரூ.5.லட்சம், ரூ.4. லட்சம், ரூ.3. லட்சம் மற்றும் ரூ.2. லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல யுடியூப்-இல் வீடியோ/குறும்படங்கள்/பாட்கா ஸ்ட் கட்டணம் செலுத்துவதற்கான வகை வாரியான அதிகபட்ச கட்டண வரம்பு முறையே மாதத்திற்கு ரூ.8 லட்சம், ரூ 7 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ. 4 லட்சம் என நிர்ணயிக் கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மற்றும் வெளி நாடுகளில் வசிப்பவர்களும் இத் திட்டத்தின் மூலம் பயனடைய முடி யும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
மிரட்டல்
மேலும் உத்தரப்பிரதேச டிஜிட் டல் கொள்கையில்,”அரசுக்கு எதி ராக ஆட்சேபனைக்குரிய செய்தி களை வெளியிடுபவர்கள் மீது சட் டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது என மிரட்ட லும் விடுவிக்கப்பட்டுள்ளது.
நெட்டிசன்களிடம் கையேந்தும் பாஜக அரசு
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவின் நிலைமை மிக மோசமாகி யுள்ளது. நடந்து முடிந்த 18ஆவது மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசியில் திக்கி திணறி தான் வெற்றி பெற்றார். அதே போல பாஜக மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 30 இடங்களை இழந்து வெறும் 36 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், “இந்தியா” கூட்டணி 37 இடங்களை கூடுதலாக வென்று 43 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதே நிலை தொடர்ந்தால் 2027 சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கும் என தற்போதே கருத்துக்கணிப்புகள் வெளியாகி யுள்ளன. இதனால் மிரண்டு போயுள்ள பாஜக நெட்டிசன்களிடம் கையேந் தும் நிலைமைக்கு சென்றுள்ளது. நல்ல பாலோவர்ஸ்களை கொண்ட நெட்டிசன்களிடம் அரசின் திட்டங்களை கொடுத்து உத்தரப்பிரதேசத்தில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது என்ற பிம்பத்தை காண்பிக்க பாஜக திட்டம் தீட்டியுள்ளது.