tamilnadu

img

தொழிலாளர்கள் எங்கு செல்லவும் உரிமை உண்டு.... உ.பி. மாநிலம் ஆதித்யநாத்தின் சொந்த சொத்து அல்ல

பெங்களூரு:
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்ததொழிலாளர்களை வேறு மாநிலங் கள் வேலைக்கு எடுத்தால், அதற்கு மாநில அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்று பாஜக-வைச் சேர்ந்தஅம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.
இதற்கு, உத்தரப்பிரதேச தொழிலாளர்களை, வெளிமாநிலங்கள் வேலைக்கு அமர்த்துவதை யாரும் தடுக்க முடியாது என்று கர்நாடக மாநிலகாங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார்பதிலடி கொடுத்துள்ளார்.“உத்தரப் பிரதேச மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல ஆதித்யநாத்தின் அனுமதி தேவை இல்லை.

தொழிலாளர்கள் இந்தியாவில் எந்தமாநிலத்திலும் வேலை செய்யஉரிமை உள்ளது” என்று கூறியிருக்கும் டி.கே. சிவகுமார், “ஜனநாயகத் தில் ஆட்சி செய்வதற்கான அடிப் படை விதிகள் கூட யோகி ஆதித்யநாத்துக்கு தெரியவில்லை. பொதுஅறிவு இல்லாதவர்கள் தான் இப்படிபேசுவார்கள். அவரின் இந்த பேச் சால், அந்த மாநில தொழிலாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்” என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.“பாஜகவுக்கு எது வசதியாக இருக்கிறதோ, அப்போது ஒரே நாடு என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு எது பொருத்தமாக இல்லையோ, அப்போது இந்தியா பல்வேறு மாநிலங்களையும், பல்வேறு மக்களையும் கொண்டுள்ளதாக கூறி வேறுமாதிரி கருத்துகளை தெரிவிக்கிறார் கள்” எனவும் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

;