tamilnadu

img

ஐக்கிய அரபு அமீரக தூதரக உதவியுடன் 27 முறை கடத்தியது 230 கிலோ தங்கம்

கொச்சி:
இரண்டு ஆண்டுகளுக்குள் 27 தவணைகளில் 230 கிலோ தங்கம் ராஜீய பார்சல் என்கிற பாதுகாப்புடன் நடைபெற்றுள்ளது. தங்க கள்ளக் கடத்தல் சாதாரண வியாபாரம்போல் நடத்த குற்றவாளிகளுக்கு உதவியது யுஏஇ தூதரகநடைமுறைகளில் உள்ள குறைபாடு கள் உதவியதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.  கள்ளக்கடத்தலின் பின்னணியில் செயல்பட்டவர்களை கண்டறிவதற்கான விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தூதரக நடைமுறைகள் குறித்து சுங்கத்துறையினர் மதிப்பீடு செய்துள்ளனர்.

ஒருபோதும் சிக்கமாட்டோம் என்கிற உறுதியான நம்பிக்கை யில்தான் ஒரே நேரத்தில் 30 கிலோ தங்கம் ராஜீய பார்சலில் கடத்த கள்ளக்கடத்தல் கும்பல் ஈடுபட்டது. இப்போது சிக்கியுள்ள கும்பல் இடையூறு இல்லாமல் தங்கம் கடத்தியபோது, அதன் விற்பனையில் கூடுதல் நபர்கள் பங்காளிகளாயினர். யுஏஇ தூதரகத்தில் சிலருக்கு தெரியாமல் அத்தகைய பரிவர்த்தனை தொடர முடியாது என்று சுங்கத்துறையினர் உறுதியாக கூறுகின்றனர். யுஏஇக்கு ஏற்கனவே திரும்பிச் சென்ற தூதரக ஜெனரலின் பாதுகாவலர் தற்கொலை முயற்சியில் மர்மம் உள்ளதாகவும், தங்க கடத்தலில் பாதுகாவலருக்கு பங்குள்ளது என்கிற சந்தேகமும் சுங்கத்துறையினருக்கு உள்ளது.

கிலோவுக்கு ரூ.6 லட்சம் லாபம்
ஒரு கிலோ கள்ளக்கடத்தல் தங்கத்திற்கு மார்ச் மாத கணக்கின்படி ஆறு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். தங்கத்தின் விலையில் யுஏஇ-க்கும் கேரளத்துக்கும் இடையிலான உள்ள வேறுபாடே இந்த லாபம். அதன்படி 30 கிலோதங்கம் கடத்தும்போது ஒன்றரைக் கோடி ரூபாய் ஆதாயமாகும். இதற்கு முன்பு பத்து முதல் பதினெட்டு கிலோ வரை தங்கம் கடத்தப்பட்டுள்ளது. பரிசோதனை இல்லாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே தங்கம் வந்துவிடும் என்கிற உறுதி இருந்ததால் மட்டுமே ஒவ்வொரு முறையும் தங்கத்தின் எடை அதிகரிக்கப்பட்டுள்ளது.ராஜீய பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் சுங்கத்துறையினரால் கண்டுபிடிக்கத் தவறியதாகக்கூற முடியாது. ராஜீய  பார்சல்களில் அனுப்பப்படும் எதையும் திறந்து ஆய்வு செய்ய சுங்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. எல்லா சரக்குகளும் ஸ்கேனரில் சரிபார்க்கப்படுவதில்லை. மற்ற உலோகங்களுக்குள் மறைத்துவைத்திருந்தாலும் ஒரு ஸ்கேனரில் தங்கத்தை கண்டறிய முடியும். இருப்பினும், ராஜீய  குடும்பஉறுப்பினர்கள் அனுப்பிய பொருட்கள் கூட பாதுகாக்கப்படுவ தால் பரிசோதனை நடப்பதில்லை. அனைத்தும் தூதரக ஜெனரலின் சான்றிதழுடன் வருவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

;