tamilnadu

img

மார்ச் 31-க்குள் ஆதாருடன் பான்கார்டை இணைக்க கெடு

புதுதில்லி:
மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாவிட்டால் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) செயல் இழக்கும்   என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.30.75 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள்  ஏற்கனவே ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் 17.58கோடி பான் கார்டுகள்  இன்னும் 12 இலக்க ஆதார் பயோமெட்ரிக் ஐடியுடன் இணைக்கப்படவில்லை.வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139 ஏஏ (2), ஜூலை 1, 2017 நிலவரப்படி பான்கார்டு வைத்திருக்கும், ஆதார் பெற தகுதியுள்ள ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.2018 செப்டம்பரில் உச்சநீதிமன்றம், ஆதார் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று அறிவித்து, வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கும், பான்கார்டுகளை ஒதுக்குவதற்கும் பயோமெட்ரிக் ஐடி கட்டாய தேவை என்று தெரிவித்தது.

;