“சீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத் தின் 370-வது பிரிவு மறுபடியும் கொண்டுவரப்படும்’’ என்று பரூக் அப்துல்லா அண்மையில் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். “ஓராண் டாக வீட்டுக் காவலில் இருந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக பரூக் அப்துல்லாஇவ்வாறு பேசுகிறார் என்று கருதுகிறேன்.இது காஷ்மீர் மக்களிடம் தேவையற்ற, சாத்தியமில்லாத எதிர்பார்ப்பை தூண்டிவிடும்” என்று கரண் சிங் குறிப்பிட்டுள் ளார்.