tamilnadu

img

தாமரைக்கு ஓட்டு போடுவது பாக். மீது போடும் அணுகுண்டாம்

தானே:
மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில், மக்கள் தாமரைபட்டனை அழுத்தி பாஜக-வுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், பாகிஸ் தான் மீது அணுகுண்டுகளை வீசுவதற்கு ஒப்பானது என்று உத்தரப்பிரதேச பாஜக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேசியுள்ளார்.

மும்பையின் தானே தொகுதியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மேத்தாவை ஆதரித்து, கேசவ் பிரசாத் மவுரியாஞாயிறன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போதுதான் இவ்வாறு பேசியுள் ளார்.“ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை. ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பின்நடக்கும் தேர்தல் என்பதால், அதிகமாகக் கவனிக்கப்படுகிறது.இந்தத் தேர்தலில் மக்கள் வாக்குஇயந்திரத்தில் தாமரை சின்னத்திற் கான பட்டனை அழுத்துவது என்பது, பிரதமர் மோடி, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், நரேந்திர மேத்தா ஆகியோருக்கு மட்டும் நல்லது செய்வதுமட்டுமின்றி, பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவதற்கு ஒப்பானதாகும். இந்தியர்களின் உண்மையான தேசபக்தியை நிரூபிப்பதாகும்.கடவுள் லட்சுமி, யாருடைய ‘கை’களிலும் (காங்கிரஸ் சின்னம்) அமரவில்லை, சைக்கிளில் (சமாஜ்வாதி) அமரவில்லை, கடிகாரத்திலும் அமரவில்லை. கடவுள் லட்சுமி தாமரை மலரில்தான் அமர்ந்துள்ளார். தாமரை சின்னம்தான் வளர்ச்சியின் அடையாளம்.இவ்வாறு மவுரியா பேசியுள்ளார்.

;