tamilnadu

img

‘பாட ஆரம்பிக்கிறார் வெள்ளைச்சாமி’ ஜூன் 30 முதல் மீண்டும் ‘மான் கி பாத்’

புதுதில்லி:
நரேந்திர மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதற்குப் பின்பு, ‘மனதின் குரல்’ (மான் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் உரையாற்றி வந்தார். 
இந்த நிகழ்ச்சி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பானது. மக்களின் மனத்தோடு நேரடியாகவே பிரதமர் உரையாடுகிறார் என்று கூறப்பட்டாலும், உண்மையில், பிரதமருடன் பேசப்போகும் நபர்களுக்கு, நீங்கள் இப்படித்தான் பேச வேண்டும்; இதைத்தான் சொல்ல வேண்டும்; இவற்றையெல்லாம் சொல்லக் கூடாது என்று முன்கூட்டியே அதிகாரிகள் சொல்லிக் கொடுத்து விடுவார்கள்.

முன்பு, சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், ‘விவசாய வருமானம் இரட்டிப்பாகி விட்டது’ என்று பிரதமரிடம் கூறி, பின்னர் அந்தக் கருத்தை நானாக கூறவில்லை; தில்லியிலிருந்து வந்த அதிகாரிகள்தான் தன்னை மிரட்டித் துன்புறுத்தி, மோடியிடம் கூற வைத்தார்கள்’ என்று உண்மையைப் போட்டு உடைத்தார்.‘ஏபிபி நியூஸ்’ என்ற செய்திச் சேனல்தான், தனது ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி மூலம், ‘மான் கி பாத்’ நாடகத்தை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியது. சத்தீஸ்கர் பெண்மணியை துணிந்து பேட்டி எடுத்து வெளியிட்டது.

குட்டு வெளிப்பட்டுப் போனதால், கொதித்துப் போன பாஜக, ‘மாஸ்டர் ஸ்ரோக்’ நிகழ்ச்சியின் வடிவமைப்பாளர்களான மிலிண்ட் கந்தேகர், தொகுப்பாளர் புன்ய பிரசூன் பாஜ்பாய் ஆகியோரை, ஏபிபி நியூஸ் ஊடகத்திலிருந்தே வெளியேற்ற வைத்தது. அதன்பிறகும் ‘மான் கி பாத்’தில் பிரதமர் உரையாடி வந்தார். இறுதியாக கடந்த பிப்ரவரியில் மோடி பேசினார். நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகளால், நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மோடி மறுபடியும் பிரதமராகி விட்டதால், முந்தைய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியை மீண்டும் தொடர முடிவு செய்துள்ளார். ஜூன் 30-ஆம் தேதி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி உரையாடுகிறார்.
 

;