tamilnadu

img

வேலையில்லாத் திண்டாட்டம் மூன்றுமடங்காக அதிகரித்தது... சிஎம்ஐஇ ஆய்வறிக்கையில் தகவல்

புதுதில்லி:
கொரோனா ஊரடங்கு காலத்தில், இந்தியாவில் வேலையின்மை விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துவிட்டது என்று சிஎம்ஐஇ (Centre for Monitoring Indian Economy- CMIE) எனப் படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப் படுத்துவதற்காக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

அச்சமயத்தில் நாட்டின்வேலையின்மை விகிதம் ஒட்டுமொத்தமாக 7 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால், இது ஏப்ரல்மாதத்தில் 23.52 சதவிகிதமாக அதிகரித்து, அதன்தொடர்ச்சியாக, மே 3 அன்றுடன் முடிவடைந்த வாரத்தில், 27.11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சிஎம்ஐஇதெரிவித்துள்ளது.கிராமப்புறங்களைப் பொறுத்தவரை, வேலையின்மை விகிதம் 26.69 சதவிகிதமாகவும், இதுவே நகர்ப் புறங்களில் 29.22 சதவிகிதம் என்ற அளவிற்கு உள்ளது என்றும் சிஎம்ஐஇ குறிப்பிட் டுள்ளது.மாநிலங்கள் அளவில் பார்த்தால், ஜார்க்கண்டில் 47.1 சதவிகிதம், பீகாரில் 46.6சதவிகிதம், ஹரியானாவில் 43.2 சதவிகிதம், கர்நாடகத் தில் 29.8 சதவிகிதம், உத்தரப்பிரதேசத்தில் 21.5 சதவிகிதம், மகாராஷ்டிரத்தில் 20.9 சதவிகிதம் என்ற அளவில் வேலையின்மை விகிதம்அதிகரித்துள்ளது.

;