tamilnadu

img

டிரம்ப் திரும்பிப்போ... விவசாயிகள் சங்கம் போர்க்கொடி  

தில்லி 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரும் 24-ஆம் தேதி இந்தியா வருகிறார்.அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வரவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் டிரம்ப்பை  வரவேற்பதற்காக விரிவான பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. ஏழைகளின் குடிசைப்பகுதியை மறைக்க சுவர் கட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவிற்கு வருவதை விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.மேலும் அவருக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரும் போராட்டத்தை  நடத்துமாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.  

;