மதுரையில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் இந்திய மாணவர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான மூத்த பத்திரிகையாளர் ‘தீக்கதிர்’ இரா.நாராயணன் இல்லத்திற்கு திங்களன்று நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.