tamilnadu

img

சுற்றுலாப் பயணிகள் வருகை 60 சதவிகிதம் குறைந்தது!

புதுதில்லி:
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்துத்துக்கு எதிரான தொடர் போராட்டங்களால் இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சுமார் 60 சதவிகிதம் சரிந்து விட்டதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.வெளிநாடுகளில் டிசம்பர் மாதம் விடுமுறை மாதம் என்பதால் இந்தியாஉள்ளிட்ட நாடுகளுக்கு அதிக எண்ணிக் கையில் வருகை தருவார்கள். அசாமிற்கு மட்டும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம்சுமார் 5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வருகை தருவர். ஆனால், மோடி அரசின்குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால், இம்முறை வெளிநாட்டு பயணிகளின் வருகையானது 90 சதவிகிதம் அளவிற்குச் சரிவைச் சந்தித்துள்ளது. 

அதேபோல வெளிநாட்டவர் இந்தியாவில் தேர்வு செய்யும் முக்கிய நகரம் கோவா. இங்கும் சுற்றுலா பயணிகளின் வருகை 50 சதவிகிதம் சரிந்துள்ளது. கடந்தநவம்பரில் 11 ஆயிரத்து 432 சுற்றுலாப் பயணிகள் கோவா வந்துள்ளனர். முந்தைய 2018-இல் இந்த எண்ணிக்கை சுமார் 32 ஆயிரம் வரை இருந்துள்ளது. 2018 டிசம்பரில் ஏறத்தாழ 42 ஆயிரம் பயணிகள் கோவாசுற்றுலாவுக்கு வந்த நிலையில், இந்த ஆண்டில் வெறும் 19 ஆயிரம் பேர்கூட வரவில்லை.இத்தனைக்கும் குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக கோவாவில் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான், ஆண்டுக்குபல கோடி பேர் வருகை தரும் தாஜ்மஹால்உள்ளது. ஆனால், தற்போதைய சூழலால், தாஜ்மஹால் வெறிச்சோடிக் கிடக்கிறது. கடந்த வாரத்தில், தாஜ்மஹாலை பார்வையிட திட்டமிட்டிருந்த சுமார் 2 லட்சம்பேர் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

சி.ஏ.ஏ. போராட்டங்களால் இணைய இணைப்புகளை மாநில அரசு துண்டித்ததன் மூலமும் ஆக்ராவில் 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை சுற்றுலா துறைபாதிப்பை சந்தித்துள்ளது.ஆக்ராவில் சுற்றுலா துறை அலுவலகத்தை தொடர்பு கொள்வோர் முதலில்கேட்பதே பாதுகாப்பு நிலைமை எப்படி உள்ளது என்றே கேட்கிறார்களாம். கடந்தஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் தாஜ்மஹாலில் சுற்றுலா பயணிகள் வருகை 60 சதவிகிதம் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;