tamilnadu

img

இது உள்நாட்டு பிரச்சனை இல்லை

வங்கதேச வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கருத்து

கொச்சி, டிச.28- மத்திய அரசு அமல்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பட்டியலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை அல்ல என வும், அது ஆசிய கண்டம் முழுவதையும் பாதிக்கும் பிரச்சனை எனவும் வங்கதேச வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். கொச்சியில் நடந்து வரும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 13ஆவது அகில இந்திய மாநாட்டில் வங்கதேச வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சுப்ரதா சவுத்ரி, பொதுச் செயலாளர் சஹாதுல் பாரி, மத்திய செயற்குழு உறுப்பினர் நஸ்முல் நஹர் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: இந்திய நீதித்துறை அரசமைப்பு சாசனத்தின் கீழ் உள்ளது என்கிற எண்ணம் பல நேரங்க ளில் ஏற்படுகிறது. அரசுக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகள் அதற்கு உதா ரணம். இந்தியா மற்றும் வங்கதேச பிரச்சனைகளில் ஒற்றுமை உள்ளன. நாடுகளை விட மனிதர்களுக்குள் சிறந்த உறவுகள் இருக்க வேண்டும். பிரச்ச னைகளுக்கு முன்னால் எல்லைகளை மறந்து ஒன்றாக போராட வேண்டும். அதிகார மோகம் கொண்ட ஆட்சியாளர்களால் இந்திய தேர்தல் முறை சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலைதான் வங்கதேசத்தி லும் உள்ளது. ஆனால் அண்மையில் இங்கு ஏற்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பும், சிறந்த வாழ்க்கைச் சூழலை யும் தேடியே வங்கதேசத்திலிருந்து மக்கள் இந்தியாவில் குடியேறு கிறார்கள் என தெரிவித்தனர்.
 

;