tamilnadu

img

பச்சை மண்டலங்களில் ஊரடங்கு கூடாது... ராகுல்காந்தி பேச்சு

புதுதில்லி:
கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைக்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும், மே 3-ஆம் தேதிக்குப் பிறகு ஹாட்ஸ்பாட் (அதி தீவிர) பகுதிகளில் மட்டுமே ஊரடங்கு தொடர வேண்டும், பச்சை மண்டலங்களில் ஊரடங்கு கூடாது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

வியாழனன்று வீடியோ கான்பிரன்ஸில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைக்கு முதலில் முன்னுரிமை தந்து கவனிக்க வேண்டும். ஊரடங்கு என்பது தற்காலிக ஏற்பாடு தான் என்றார்.

இந்தியாவில் 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் அதாவது அதிதீவிரப் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் ஏப்.20-ஆம் தேதி அறிவித்திருந்தார். புதிய தொற்றுகள் ஏதுமில்லாத பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்படும் எனக்கூறியிருந்தார். பச்சை மண்டலங்களாக வியாழக்கிழமை வரை எந்தப்பகுதியும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவாரூர், சேலம்,  நாகப்பட்டினம் ஆகியமாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 

;