புதுதில்லி: கொரோனா கட்டுப்படுத்த ஊரடங்கு உத்திரவு உள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தடையின்றி செயல்படும் என் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழக்கம்போல் விநியோகம் செய்யப்படுகின்றன; சிலிண்டர் விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஏப்ரல் வரை மக்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.