tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்ட ருக்கு 78.50 ரூபாய் என விலை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும், இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பப் பதிவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் விஷவாயு தாக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார்.

பாகிஸ்தான் தலிபான் என அழைக்கப்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற பயங்கர வாத அமைப்பின் தலைவரான நூர் வாலி மெஹ்சுத்தை உலகளவில் பயங்கரவாதியாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

தொழில்நுட்பம், பொருளா தாரம், ராணுவம் போன்ற துறைகளில், சர்வதேச அளவில் அமெ ரிக்காவுக்கு மாற்றாக சீனா உருவாக முயற்சிப்பதாக கூறுவது தவறான தகவல் என சீனா தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. மருந்துக் கடைகள், மருத்துவமனை கள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தி யாவசிய பணிகளுக்கு மட்டுமே அனு மதியளிக்கப்பட்டுள்ளது.