ஸ்ரீநகரில் விமானப்படை தீவிர போர்ப் பயிற்சி!
சீனாவால் ஏற்படக்கூடிய எந்தவொரு அசாதாரண சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் ஸ்ரீநகர் விமானப் படைத் தளத்தில் இந்தியா தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளது. ராணுவப் படையினரை குவிப்பது, ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை குவிப்ப தற்கான பயிற்சிகளை நடத்தி வருகிறது.
ராணுவத்தில் பெண்களுக்கு பதவி உயர்வு: அரசுக்கு கெடு
ஆண்களுக்கு நிகராகபெண்களுக்கு ராணுவத் தில் பணி வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்கு வதற்கான ஆணையத்தை ஒரு மாதத்தில் அமைத்தாக வேண்டும் என்று நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கேட்ட 6 மாத அவகாசத்தை நிராகரித்துள்ளது.
பெண் தொழிலாளி மீது நாயை ஏவிய முதலாளி
தில்லி மால்வியா நகர் அழகுநிலைய பெண் தொழிலாளி சப்னா (39), தனது சம்பளப் பாக்கியைக் கேட்டு, முதலாளி யின் வீட்டிற்குச் சென்றுள் ளார். அப்போது முதலாளிரஜினி என்பவர், நாயை ஏவி தொழி லாளியை கடிக்க விட்டுள்ளார். அப்போது கத்தக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். படுகாயம் அடைந்த சப்னாவின் கழுத்தில் தற்போது 15 தையல் போடப்பட்டுள்ளது. ரஜினி கைது செய்யப்பட்டுள்ளார்.
உ.பி. போலீசார் 68 பேர் கூண்டோடு மாற்றம்!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், விகாஸ்துபே என்ற ரவுடி தன்னைப்பிடிக்க வந்த போலீசாரில் 8 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரவுடி துபே-வுக்கு நெருக்கமானவர்கள் போலீசிலேயே இருப்பதாக அப்போது புகார்கள் எழுந்தன. இதையடுத்து சிறப்பு படைடி.ஐ.ஜி. அனந்த் தேவ் உட்பட சபேபூர் காவல்நிலையத்தின் 68 போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் பக்தர்கள் மீது வேதிப்பொருள் தெளிப்பு!
திருப்பதி ஏழுமலை யான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மீது சாமி தரிசன வரிசையின்போது உலர் ஓசோன் வேதிப்பொருள் தெளிக்கப்படுகிறது. இந்த உலர் ஓசோன் வேதிப்பொருளானது, பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவற்றை முழுமையாக அழிக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.
கங்கையை சுத்தப்படுத்த உலக வங்கியிடம் கடன்
கங்கையைத் தூய்மைபடுத்தும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்கு, உலகவங்கி 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 3 ஆயிரம் கோடி)
அளவிற்கு கடனுதவி அளித்துள்ளது. இதற்காக உலக வங்கிக்கும், இந்திய அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பீகார் முதல்வர் நிதீஷின் மருமகளுக்கு கொரோனா!
பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. அவருக்கு 6 அரசு மருத்துவர்கள், 3 செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நிதிஷ்குமாரின் அரசு இல்லத்தில்தான் மருமகள் தங்கியிருந்தார் என்பதால், அரசு இல்லமும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளது.
கே.சி.ஆருக்கு கொரோனாவா? பத்திரிகை மீது வழக்கு
“தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தனது பண்ணை வீட்டுக்குச் சென்றுள்ளார்” என்று ‘ஆதாப் ஹைதராபாத்’ (Aadab Hyderabad) என்ற தெலுங்கு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர் வெங்டேஸ்வர் ராவ் உட்பட 3 பேரை காவல்நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர்.