tamilnadu

சவுகிதார் விழித்திருந்த கனமும் குறட்டைவிட்டு உறங்கிய பொழுதும் சாட்டையைச் சொடுக்கிய சமூக செயற்பாட்டாளர்

புதுதில்லி, ஏப்.1- பிரதமர் மோடி தன்னை சவுகிதார் (காவலாளி) என்று கூறிவரும் நிலையில், அந்த ‘சவுகிதார்’ உறங்கிய நேரத்தையும், விழிப்புடன் இருந்த நேரத்தையும் குறிப்பிட்டு, சமூக செயற்பாட்டாளர் ரோகித் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ரோகித் குமார் கூறியிருப்பதாவது:கடந்த 2015-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்ற கமிட்டியின் முன்பு வாக்குமூலம் அளிப்பதற்காக, லண்டன் செல்லும்விமானத்தில் ஏறிய ‘கிரீன்பீஸ்’ செயற்பாட்டாளர் பிரியா பிள்ளை, ‘சவுகிதார்’ அரசால் மிகவும் விழிப்புடன் கண்காணிக்கப் பட்டு, விமானத்திலிருந்து இறக்கி விடப் பட்டார். ஏனெனில், அவர் லண்டன் சென்றுசாட்சியம் அளித்தால், நாட்டின் நன்மதிப் புக்கு களங்கம் ஏற்பட்டு விடுமாம்.2016-ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் சஸ்சக்ஸ் பல்கலைக்கழகத்தில் தெற்காசியாவின் சுற்றுச்சூழலியல் வரலாறு மற்றும்அரசியல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக, பழங்குடியின மக்களின் உரிமைப் போராளிகிளாட்சன் டங்டங் சென்றபோது, அவரும் மத்திய அரசால் மிகவும் விழிப்புடன் கண்காணிக்கப்பட்டு, விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். ஏனெனில் அவரின் செயல் பாடும் நாட்டின் நன்மதிப்பை குலைக்கும் என்று கூறினார்கள்.இப்படி மக்களுக்கான போராளிகளை மிகுந்த விழிப்புடன் இருந்து கண்காணித்தநமது சவுகிதார், மக்களின் வரிப்பணம், மக்கள் வங்கிகளில் சிறுகச் சிறுக செலுத்தியசேமிப்புத் தொகை ஆகியவற்றை திருடர்கள் வகை தொகையின்றி கொள்ளையடித்து விட்டு தப்பும்போது மட்டும் பிரமாதமாக உறங்கி விட்டார். நீரவ் மோடி, மெகுல்சோக்ஸி, நிதின் சந்தேசரா என தப்பியோடியவர்களின் பட்டியல் நீள்கிறது. 27 பேர் தப்பியிருக்கிறார்கள். ஆனால் அவர் களை எல்லாம் மடங்கிப் பிடிக்காமல் நமது‘சவுகிதார்’ உறங்கி விட்டார்.இவ்வாறு ரோகித் குமார் கூறியிருக்கிறார்.

;