tamilnadu

img

தேசிய அளவில் ட்ரெண்டாகும் ஹந்தி_ தெரியாது_போடா ஹேஷ்டேக்

இந்தி தெரியாது போடா என்ற ஹேஸ் டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா மான்ட்ரியல் திரைப்பட விழாவில் ஆடுகளம் படத்தை ஸ்கீரன் செய்து விட்டு திரும்பி வந்த போது விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்டேன் என்று இயக்குநர் வெற்றி மாறன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.  இது தற்போது சமூக  வலைதளங்களில் பரபரப்பான பேசு பொருளாக மாறி உள்ளது. இதையடுத்து இந்தி எப்படி இந்தியாவின் தாய் மொழியாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் ஹிந்தி_ தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக்கை இன்று காலை முதல் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, டி- சர்ட் ஒன்றை அணிந்துள்ளார். அதில் திருவள்ளுவர் படத்துடன், நான் தமிழ் பேசும் இந்தியன் என்று அச்சிடப்பட்டிருந்தது. யுவனுடன் நடிகர் ஸ்ரீரீஷ் இருக்கிறார். இவர் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார். இதில் இந்தி தெரியாது போடா  என்று எழுதப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரின் மனைவியும் இதே ஜோடி டி- சர்ட்களை அணிந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து  நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் இந்திக்கு எதிரான  டி சர்ட்டுகளுடன் தங்கள்  புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.