tamilnadu

img

பாஜக மாணவர் அமைப்பு தலைவரின் அநாகரீகம்

பாஜகவின் மாணவ பிரிவான ஏபிவிபி தேசிய தலைவர் மருத்துவர் சுப்பையா. சென்னை நங்க நல்லூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர்  கடந்த ஜூலை 10ம் தேதி சாதாரண பார்க்கிங் பிரச்சனைக்காக பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கும் 62 வயது பெண் வீட்டின் முன்  சிறுநீர் கழித்து தகாத செயல்களில் ஈடுபட்டார். இதையடுத்து கடந்த ஜூலை 11ம் தேதி சிசிடிவி ஆதாரங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது இச்சம்பவம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.