tamilnadu

img

நேதாஜி அறிவித்த இந்திய அரசு - பெரணமல்லூர் சேகரன்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் 1942ல் இந்திய தேசிய இராணுவம் முறையாக உருவாக்கப்பட்டது. ஒரு படைத்தள பிரிவு, 3 கொரில்லாப் படைப் பிரிவுகளோடு துணை மற்றும் சிறப்புப் பிரிவுகளையும் கொண்டிருந்தது. போரின் முதல் நிலையில் பிரிட்டிஷா ரால் புறக்கணிக்கப்பட்ட, கொரில்லா முறை நடவடிக்கையிலேயே பெரும் பாலும் பயிற்சி இருந்தது. ஜெனரல் மோகன்சிங்குக்கும் ஜப்பானியர்களுக்கு மிடையே அடிப்படை வேறுபாடு தோன்றி யதால் சீக்கிரமே இந்திய தேசிய இராணு வத்தில் நெருக்கடி ஏற்பட்டது. இதில் மூன்று இந்திய அதிகாரிகள் படையை விட்டு ஓடியதால் இந்த நெருக்கடி பெரும் பிரச்சனையாக வெடித்தது. இம்மூன்று அதிகாரிகளும் பர்மாவிற்கு அங்குள்ள நிலைமையை ஆராய அனுப்பி வைக்கப் பட்டனர். ஆனால் எல்லையைத் தாண்டிய உடன் அவர்கள் பிரிட்டிஷ் படையில் சேர்ந்து, இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் பிரிட்டிஷ் இந்தியாவைத் தாக்கும் அதன் திட்டங்கள் அனைத்தையும் அவர்களுக்கு தெரியப்படுத்திவிட்டனர். மேலும் ஜப்பானியர்கள் இந்திய தேசிய இராணுவத்தை ஒரு துணைப்படையாக அறிவிப்பது என்ற உறுதிப்பாட்டையும் மதித்து நிறைவேற்றவில்லை. ஜப்பா னியர்களால் கேப்டன் மோகன்சிங்கும் மற்ற சில அதிகாரிகளும் பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சுபாஷ் சந்திர போஸ் பெர்லினிலிருந்து தென்கிழக்கு ஆசியா விற்கு- சுமத்ராவிற்கு வந்து சேர்ந்தார். இந்திய அதிகாரிகளால் மட்டுமே தலைமையேற்று நடத்தப்படக்கூடிய இந்திய தேசிய இராணுவத்தை ஒரு துணைப்படையாக நடத்த வேண்டும். மேலும் இந்திய மண்ணில் கால் வைத்த வுடன் ஜப்பானியர்களால் எவ்விதமான தலையீடுகளும் இருக்கக்கூடாதென்ற முழு உறுதிமொழியை ஜப்பானின் பிரதம மந்திரி, ஜெனரல் டோஜாவிடமிருந்து பெற்ற பிறகே, அவர் சுமத்ராவிலிருந்து டோக்கியோவுக்குச் சென்றார்.

இரண்டாம் உலகப் போரில் அச்சுநாடு கள் அனைத்தும் சுயமுயற்சியை இழந்து விட்டதால், அனைத்து போர் முனைகளி லும் முறியடிக்கப்பட்டன. சோவியத் மீதான தாக்குதல் அவர்களுக்கு மிக அதிக மான இழப்பை ஏற்படுத்தியது. காரணம் சோவியத்தில் கடைசி ஆண் அல்லது பெண் இருக்கும் வரையில் போரில் உயி ரைக் கொடுக்கத் தயாராக இருந்தனர். நேசநாடுகள் வான்படைகள், பீரங்கிப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், அனைத்துவிதமான போக்குவரத்து சாதனங்கள் அனைத்தையும் பெற்றி ருந்தன. மறுபுறம், ஜப்பானியர்கள் தங்கள் வீரர்களுடைய போர் புரியும் உந்துதலைத் தவிர வேறெதையும் கொண்டிருக்க வில்லை. அனைத்தையும் செலவழித்தி ருந்தனர். இந்நிலையில் போஸ், இந்தியத் தேசிய இராணுவம் மனச்சோர்வடைய வும் ஆயுதந்தாங்கிய போராட்டத்தைக் கைவிடவும் எவ்வித காரணமுமில்லை என்று கருதினார். 1943, ஜூலை 3 ஆம்நாள் சிங்கப்பூரில் அவர் வந்து சேர்ந்தது முதல் இந்திய சுதந்திர லீக்கின் தலை வர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். உடனே வீரர்களையும் பொருட்களையும் மொத்தமாக திரட்டுவதற்கு ஓர் அறை கூவல் விடுத்தார்.

இந்திய தேசிய இராணுவத்தின் பலம் மூன்று வாரங்களில் இரண்டு மடங்கா னது. காரணம் இதுவரை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த இராணுவத்தின ரல்லாத பொதுமக்களும் படை வீரர்களாக நியமிக்கப்பட்டனர். 1943, அக்டோபர் 21 அன்று, ஆஸாத் ஹிந்த் என்ற ஒரு தற்காலிக ஆட்சியை அமைப்பதாக போஸ் அறிவித்தார். தென்கிழக்கு ஆசி யாவின் இந்தியர்களால் கொடையாகக் கொடுக்கப்பட்ட பணம் மற்றும் தங்கம் போன்றவற்றில் இருந்து ஆஸாத் ஹிந்த் வங்கியைத் துவங்கினார். இந்த வங்கியால் ஜெர்மனி, ஜப்பானிய அர சாங்கங்களிடமிருந்து கடனாகப் பெற்ற அனைத்துப் பணத்தையும் திருப்பிக் கொடுக்க முடிந்தது. அதோடு இந்திய தேசிய இராணுவத்திற்கான செலவு களுக்காகவும் பணம் செலுத்த முடிந்தது. ஜான்சிராணி ரெஜிமெண்ட் என்ற ஒரு புதிய பெண்களின் படைப்பிரிவை ஏற்படுத்தியது அவரால் எடுக்கப்பட்ட புரட்சிகரமான முடிவு. இதனால் ஆணும் பெண்ணும் சமம் என்று இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகிற்கே கோடிட்டுக் காட்டினார்.

1943, ஆகஸ்டு 15 நேதாஜி வடக்கு மலேயாவிலுள்ள பகதூர்குழு பயிற்சி முகாமிற்குப் பயணித்து, அவர்களின் பயிற்சி எந்த அளவிற்கு முன்னேறி யுள்ளது என்பதைப் பார்வையிட்டார். 1944 பிப்ரவரி 13 அன்று பிரிட்டிஷ் படையின் மீது தாக்குதல் நடத்த ஆணை கள் வழங்கப்பட்டன. கடுமையான சண்டைக்குப் பின் அதில் பிரிட்டிஷாருக்கு அதிக அளவில் சேதம் விளைவிக்கப்பட் டது.அதே நேரத்தில் இந்தியதேசிய இராணுவத்தின் சேதம் மிகக் குறை வாகவே இருந்தது. எனவே பிரிட்டிஷார் பள்ளத்தாக்கில் பின்வாங்கினர். இந்திய தேசிய இராணுவம் கென்னடி சிகரத்தைக் கடந்து மணிப்பூரில் நுழைந்தது. இந்திய தேசிய இராணும் மற்றும் ஜப்பானியப் படைகளின் ஒருங்கிணைந்த படைகள் கோஹிமா மற்றும் இம்பால் வரையில் முன்னேறின. ஒருங்கிணைந்த படையின் மற்றொரு குழு திட்டின்ரோடு என்ற இடத்தை நோக்கி முன்னேறிச் சென்று, யாய்ஜோக் திங்கைபீய், சர்ச்சந்தபூர் ஆகிய பிரிட்டி ஷின் பாதுகாப்புத் தளங்களைக் கைப்பற்றியது. பிரிட்டிஷ் படைகள் மொய்ராங் மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளிலிருந்து கட்டாயமாகப் பின்வாங்க வேண்டியிருந்தது.

இந்திய தேசிய இராணுவத்திற்கு மணிப்பூர் மக்கள் இதயப்பூர்வமான ஒத்து ழைப்பைக் கொடுத்தனர். பணம் எதுவும் வாங்காமல் உணவுப் பொருட்களை வழங்கினர். மொய்ரீங் இந்திய தேசிய இராணுத்தின் முன்னேறும் தளமாக ஆனது. அங்கு, 1944 ஆகஸ்டு 18 அன்று இந்திய மூவர்ணக்கொடி பறக்கவிடப் பட்டது. கேப்டன் ஹரக்சிங், தீப்சந்த்சிங், நாகி அகமது சௌத்ரி, லெப்டினென்ட் சென்குப்தா ஆகியோர் இந்தப் போர்க் காரியங்களில் ஈடுபட்ட மற்ற இந்திய தேசிய இராணுவத்தினராவர். ஜப்பானின் தொடர்பு அதிகாரிகளாக லெப்டினென்ட் இடோவும், லெப்டினென்ட் ஆண்டோ வும் இருந்தனர். இந்திய தேசிய இராணு வமும், ஜப்பானியப் படைகளும் ஒன்று சேர்ந்து, பிரிட்டிஷ் வலுவான நிலையில் அமர்ந்திருந்த பிஷன்பூரைக் கைப்பற்ற முயற்சி செய்தன. மிகப்பெரிய சண்டை நடந்தது. இதில் நமது சேதம் மிக அதிக மாகும். பிரிட்டிஷ் படை மிகப்பெரிய தள வாடங்களைக் கொண்டிருந்ததாலும் அவர்களை அங்கிருந்து விரட்ட முடிய வில்லை. மணிப்பூரின் இளைஞர்கள் பலரும், சில பெண்களும் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து தோளோடு தோள் நின்று போரிட்டனர். துரதிருஷ்டவச மாக இந்திய தேசிய இராணுவத்தினரின் எண்ணிக்கை பிரிட்டிஷாரைவிட மிகக் குறைவாகவே இருந்தது. அதோடுகூட, பருவமழையும் அதன் காலத்திற்கு முன்பே துவங்கியபடியால், படை வீரர்கள் சேறு சகதிகளில் சிக்கித் துயருற்ற னர்.

1944, ஜுன் 13 அன்று பின்வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.போக் கு வரத்து வசதி இல்லாததால் களைப்படை ந்த காயமடைந்து நோயுற்ற படைவீரர்கள் குடிநீருமின்றி நடந்தே சென்றனர். அவர்களில் பலர் புரையோடிய காயங் களாலும் மலேரியாவினாலும் வயிற்றுப் போக்கினாலும் வழியிலேயே இறந்து விட்டனர். இவர்களுக்கான மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுடன் நேதாஜி தங்கியிருந்த மாட்னலே என்ற இடத்திற்கு மீதியிருந்தவர்கள் வந்து சேர்ந்தனர். கர்னல் சௌகத் அல் முல்லிக் நேதாஜி யால் இந்திய தேசிய இராணுவத்தின் மிகப்பெரிய சர்தார்-இ-ஜங்க்’ என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார். மற்றும் பல வீரர்களும் அதி காரிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

டிசம்பர் மாத இறுதியில் வடக்கு பர்மாவில் பிரிட்டிஷின் முன்னேற்றத் தைத் தடுக்கும் வகையில் மற்றொரு தாக்குதல் பகதூர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. இதுவும் வெற்றி பெறவில்லை. தாய்லாந்திற்குப் பின்வாங்கி இறுதியில் பிரிட்டிஷாரிடம் சரணடைந்தனர். இவ்வாறு இந்திய சுதந்திரத்தின் ஆயுதந் தாங்கிய போராட்டத்தின் பிர காசமான அத்தியாயம் முடிந்தது.

1944 ஏப்ரல் 18 அன்று இந்திய தேசிய இராணுவப் படைவீரர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இம்பாலுக்கு அருகிலுள்ள மொய்ராங் பகுதியை விடுவித்தனர். இப் போராட்டத்தில் சுமார் 21000 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அன்றைய நாளிலேயே இம்பாலுக்கு அருகிலிருந்து தற்காலிக இந்திய அரசு தனது பணிகளைத் தொடங்கியது. இந்திய தேசியப் படையின் ராணி ஜான்சி ரெஜிமென்ட், கேப்டன் லட்சுமி செகல் தலைமையின் கீழ் இருந்தது. 1998 ஏப்ரல் 12 அன்று கேப்டன் லட்சுமி செகலுக்கு அவருடைய பணிகளுக்காக இந்தியக் குடியரசுத் தலைவரால் பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.

நேதாஜி இந்திய அரசை அறிவித்த நாள் அக்டோபர் 21

 

;