tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கும் அதன் தொடர்ச்சியாக அவ்வழக்கில் பிரதானமாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாஜக எம்எல்ஏ, புகார் அளித்தவரையும் அவர்தம் குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகத் தீர்த்துக்கட்டிட மேற்கொண்ட கிரிமினல் நடவடிக்கைகளும் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதுடன், “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்” என்கிற திட்டம் குறித்த பாஜகவின் கபட நாடகத்தையும் நாட்டு மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. அந்தக் கிரிமினல் எம்எல்ஏவின் அட்டூழியம் தேசம் முழுவதும் அசிங்கப்பட்ட பின்னர்தான் பாஜக அந்த நபரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறது. பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற நடவடிக்கைகளைக் பாழ்படுத்திட உத்தரப்பிரதேச அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டுவந்ததை அடுத்து, அந்த அரசாங்கத்திற்குக் குட்டு வைத்திடும் விதத்தில் அம்மாநிலத்தின் நீதிமன்றங்களில் இதுதொடர்பாக நடைபெற்று வந்த நான்கு வழக்குகளை தில்லியில் உள்ள நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றல் செய்து வரவேற்கத்தகுந்த ஆணை பிறப்பித்திருக்கிறது. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் அப்பாவிகள்கூட தங்களுக்கு நீதி கிடைத்திட எந்த அளவிற்குப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம்.

;