politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பொருளாதார வீழ்ச்சி, வணிகரீதியான வாகனங்கள் உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த மாதத்தில் மட்டும் 5 முதல் 18 நாட்கள் வரை தனது அனைத்து ஆலைகளிலும் விடுமுறை அளித்துள்ளது. அசோக் லேலண்ட் என்பது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வணிக ரீதியான வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் என்பதை கவனிக்க வேண்டும். இதுபோன்ற கனரக வாகனங்கள், நடுத்தர ரக வாகனங்கள் உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 59 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு காரணம் மிக எளிமையானது. சரக்குப் போக்குவரத்து கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. சரக்குகள் தேங்கி நிற்கின்றன. வாங்கும் சக்தி இல்லாததால் அதை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறைந்துகொண்டிருக்கிறது. அது கனரக வாகனங்கள் உற்பத்தியில் எதிரொலிக்கிறது. இது கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பிரச்சனை இதுபோன்ற உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் வேறு சில திட்டங்களில் செலவு செய்து கொண்டிருக்கிறது. கனகர வாகனங்கள் உற்பத்தி வீழ்ச்சி என்பது வெறும் புள்ளி விபரம் அல்ல, அது ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சியின் அடையாளம்.