புன்னப்புரா:
கம்யூனிஸ்ட் கட்சியைகுழிதோண்டி புதைத்து விட்டதாக பெருமை பேசியவர்கள் முன்னால் வரலாற்றை உருவாக்கியவர்கள் நாங்கள். அந்த முன்னேற்றம் தொடரும். புன்னப்புரா- வயலார் ரத்தசாட்சிகளின் தியாகம் வீண்போகவில்லை என போராட்ட நாயகன் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.
புன்னப்புரா தியாகிகளின் நினைவு மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறியிருப்பதாவது: கம்யூனிஸ்ட் கட்சியை அடக்கம் செய்து விட்டதாக பெருமிதம் கொண்ட திவான்களின் கண்களுக்கு முன்பாக ஒரு நூற்றாண்டுக்கு பிறகு, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து உலக வரலாற்றை உருவாக்கியது. அந்த முன்னேற்றம் தொடர்கிறது. இந்தியாவுடன் ஒன்றிணைக்காமல் திருவிதாங்கூரை ஒரு சுதந்திர நாடாக வைத்திருப்பதுடன் அமெரிக்க ஆட்சி முறையை நிறுவ நாடுவழி-திவான்அரசாங்கம் முயன்றது. இதற்கு எதிரான புகழ்பெற்ற புன்னப்புரா- வயலார் போராட்டத்தின் போது, திவான் ஆட்சியின் மிருகத்தனமான வேட்டையில் நூற்றுக்கணக் கான தோழர்கள் உயிர் இழந்தனர். இன்னும் பல போராளிகள் உயிருள்ள தியாகிகளாகமாறினர்.
அடக்குமுறையின் மிருகத்தனமான நடவடிக்கைகளை போராடிய தோழர்கள்எதிர்கொள்ள வேண்டியிருந் தது. கிளர்ச்சியை இரத்தத் தில் மூழ்கடிக்க திவானால் முடிந்தது. இருப்பினும், புன்னப்புரா- வயலார் போராளிகள் எழுப்பிய “அரபிக் கடலில் அமெரிக்க மாதிரி”என்ற முழக்கம் நிறைவேற்றப்பட்டு சுதந்திரமும் ஜனநாயகமும் நிறுவப்பட்டது.நாட்டின் விடுதலைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் உயிர்த்தியாகம் செய்த புன்னப்புரா- வயலாரின் வீரர்களான தியாகிகளின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதாக வி.எஸ்.அச்சுதானந்தன் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனை நினைவுநாள் ஏற்பாடுகளுக்கான குழுவின் செயலாளர் மோகன் குமார் வாசித்தார்.