tamilnadu

img

உள்ளூர் காவல்துறையை விட மோசமாக நடந்துகொண்ட சிபிஐ

புதுதில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா, சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, வீட்டின் காம்பவுண்ட் ஏறிக்குதித்து, சிபிஐ அதிகாரிகள் கைது செய்திருப்பதற்கு, சிபிஐ முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். 

“என்னுடைய பணிக்காலத்தில் எத்தனையோ வழக்குகளை பார்த்துள்ளேன் முன்ஜாமீன் வழக்கில் 3 நாள் அவகாசம் இருக்கும் நிலையில் இவ்வாறெல்லாம் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யமாட்டார்கள்”என்று அவர் கூறியுள்ளார். “சம்மன் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், ப.சிதம்பரம் சிபிஐயில் தொடர்ந்து ஆஜராகி வந்தார். இரண்டு ஆண்டுகள் ஆஜரானவர் 2 மணி நேரத்தில் ஓடிவிடமாட்டார்” என்று கூறியுள்ள ரகோத்தமன், “இதுபோன்ற நடவடிக்கையை சிபிஐ எந்த காலத்திலும் செய்ததில்லை. இந்திரா காந்தியை கைதுசெய்தபோதுகூட இப்படி நடந்ததில்லை; அவரைக் கைது செய்யும்போது, சிபிஐ தானாகவே அவருக்கு பெயில் வழங்க முன்வந்தது,ஆனால் சஞ்சய் காந்திதான், ‘நீங்கள் வந்தது கைது செய்யத்தானே; அதையே செய்யுங்கள்’ என்று கூறி கைது செய்ய வைத்தார்” என்றும் தெரிவித்துள்ளார்.“பின்னர், நீதிமன்றத்தில் இந்திரா காந்தியின் பெயில் பெட்டிசன் வந்த போதும்கூட சிபிஐ ஆட்சேபணை எதையும் தெரிவிக்கவில்லை” என்று சுட்டிக்காட்டியிருக்கும் ரகோத்தமன், “ஆனால்,சிதம்பரம் வழக்கில் உள்ளூர் காவல்துறையினரைப் போல சிபிஐ அதிகாரிகள் செயல்படுவார்கள் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

;