tamilnadu

img

21 நாட்கள் லாக்-டவுனில்  நடந்தது என்ன? கொரோனாவை கடந்துவருவது எப்படி? ராஜ்நாத் சிங் ஆலோசனை

புதுதில்லி:
கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு கொண்டு வந்தது. ஊரடங்கு நாட்களில் மக்கள் வெளியே நடமாடவும், சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது.

ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் 21 நாட்கள் ஊரடங்கு முடிகிறது. அதற்குப் பின்  ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது முடித்துக்கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் துணைக்குடியரசுத்  தலைவர் நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது./இந்தச் சூழலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவரின் இல்லத்தில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அரசு இருமுடிவுகளைத்தான் எடுக்க முடியும்.  ஒன்று மக்களின் வாழ்க்கையை தியாகம் செய்வதா, அல்லது வாழ்வதாரத்தை தியாகம் செய்வதா என்பதே அது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை நீக்குவது குறித்தோ அல்லது நீட்டிப்பது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குத் தடையின்றி கிடைக்கிறதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நிதி தேவைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின்  ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு இல்லை போன்ற அறிவிப்புகளை அமைச்சர்கள் வரவேற்றனர்.இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டர்  பதிவில், "அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட சூழலை எவ்வாறு கடந்து வருவது   என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்களுக்கு எவ்வாறு ஊக்கமளிப்பது, கரோனவுக்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர்களுடனும், மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்புதான் ஊரடங்கு முடிவு குறித்து அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

;