tamilnadu

img

து. ராஜா - வைகோ சந்திப்பு

புதுதில்லி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜாவை மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ வெள்ளியன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். ஒரு தமிழராகிய நீங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்தியப் பொதுச் செயலாளராகத் தேர்வு பெற்ற செய்தியைக் கேட்டுமிக்க மகிழ்ச்சி அடைந்தேன். பெருமையாக இருக்கின்றது என்று மதிமுக தலைவர் வைகோ கூறினார்.அவருக்கு து. ராஜா நன்றி தெரிவித்தார்.  அத்துடன் எம்.பி.யாக பதவியேற்றுள்ள வைகோவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

;