tamilnadu

img

கண்ணீருடன் காத்திருக்கிறோம் சுஜித்...

மீட்புப் பணியை நேரில் பார்வையிட்டு  சிறுவனின் பெற்றோருக்கு  கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்

மணப்பாறை, அக்.28- திருச்சி மாவட்டம் மணப் பாறை அருகே போர்வெல் குழிக்குள் விழுந்த சிறுவன் சுஜித் வில்சனை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பார்வையிட் டார். மேலும் சுஜித்தின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பள்ளி ஆரோக்கியராஜ், கலாராணி ஆகியோரின் இரண்டாவது மகன் சுஜித் வில்சன். கடந்த 25 அன்று வீட்டின் அருகே இருந்த சோளக்காட்டில் போர்வெல் குழிக்குள் தவறி விழுந்தான். அவனை  மீட்கும் பணி மும்முர மாக நடந்து வருகிறது. இந்நிலை யில் கே.பாலகிருஷ்ணன் திங்களன்று நடுக்காட்டுப் பட்டி சென்று மீட்புப் பணி யில் ஈடுபட்டுள்ள அதிகாரி களிடம் விபரங்களை கேட்டறிந்தார். சுஜித்தின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், குழந்தை சுஜித் உயிரு டன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே கண்ணீருடன், கவலை யுடனும் காத்திருக்கிறது. வெள்ளியன்று சுஜித் தவறி விழுந்த நிலையில் இதுவரை மீட்கப்படவில்லை என்பது ஆழ்ந்த கவலைக்குரியது. இப்போது கொண்டுவரப் பட்டுள்ள நவீன சாதனங்கள் முன்னமேயே கொண்டு வரப்பட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும். இந்தளவு விஞ்ஞானம் தொழில்நுட்ப  வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதும், போர்வெல் குழிக்குள் விழுந்த குழந்தை யை மீட்க நான்கு நாட்  களுக்கு மேல் ஆகிறது என்பது துரதிருஷ்டவச மானது. இதற்கான நவீன அறிவியல் தொழில்நுட்பங் கள் கண்டறியப்பட வேண் டும். தமிழகம் முழுவதும் மூடப்படாத போர்வெல் குழிகளை உடனடியாக மூட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை சுஜித் மீட்கப்பட்டார் என்பது ஒன்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமையும் என்று குறிப்பிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன். புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மணப்பாறை வட்டச் செயலாளர் ராஜ கோபால், வையம்பட்டி வட்டச் செயலாளர் வெள் ளைச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் அருணன், மாநகர் மாவட்ட வாலிபர் சங்க செயலாளர் லெனின், புறநகர் மாவட்ட தலைவர் பாலு, வேங்கை குறிச்சி கருப்பையா, மூத்த தலைவர்  சோமு, நல்லு, சந்தியாகு மற்றும் மணப்பாறை வட்டக் குழு உறுப்பினர்கள் கண் ணன், சீனிவாசன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

மாநில செயற்குழு அறிக்கை

முன்னதாக கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கே.பாலகிருஷ்ணன் விடுத் திருந்த அறிக்கையில், “சுமார் 60 மணிநேர போராட்டத் திற்குப் பின் இன்னும் 12 மணி நேரம் என்பது பதற்றத்தை யும் படபடப்பையும் அதி கரித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் பணி அதிகாரிகள், தீயணைப்புத்துறை, காவல் துறை மற்றும் பல்வேறு சமூக சேவைக்குழுக்கள் இரவு - பகலாக மீட்புப் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். வெகு விரைவில் இந்தப் பணி வெற்றிகரமாக நடந்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறியிருந்தார்.
 

;