tamilnadu

img

கரையை கடக்க தயார் நிலையில் இருக்கும் ஆம்பன் புயல்....

புவனேஸ்வர் 
தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது சூப்பர் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில மணிநேரங்களில் மேற்கு வங்க மாநிலத்திற்கும், வங்கதேச நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் கரைக்கடக்க தயார் நிலையில் உள்ளது. 

மதிய நேர நிலவரப்படி மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு கடற்கரை பகுதியில் மையம் கொண்டிருந்த ஆம்பன் புயல் மிகவும் மூர்க்கமான சேதத்தை ஏற்படுத்தும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் அண்டை மாநிலமான ஒடிசாவில் வரலாறு காணாத அளவில் கனமழை பொழிந்து வருகிறது. 

குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கரைக்கடக்கும் மாநிலத்திற்கு அருகே உள்ள ஒடிஷாவுக்கு இந்த நிலைமை என்றால், மேற்கு வங்கம்  மற்றும் வங்கதேச நாட்டிற்கு ஆம்பன் புயலால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பது புயல் கரையைக் கடந்த பின்பு தான் தெரியும்.  

;