தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கான காரணம் என ரயில்வே உயரதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது; 900 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கான காரணம் என ரயில்வே உயரதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பச்சை சிக்னல் ரத்தானதால் லூப் லைனில் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்து மோதியதில் அதன் பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்டு மெயின் லைனில் விழுந்த பெட்டிகளால் அவ்வழியே வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.