tamilnadu

img

கொரோனாவைக் காட்டி 25 சதவிகித ஊதிய குறைப்பு... வேலையைக் காட்டின விமான நிறுவனங்கள்

புதுதில்லி:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டுவாரங்களாகவே இந்தியாவில் விமானங்கள், ரயில்கள்,பேருந்துகளில் பயணிகளின்எண்ணிக்கை வெகுவாககுறைந்து விட்டது. அதேபோல சர்வதேச விமானப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளால், விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

இந்நிலையில், பயணிகள் எண்ணிக்கை குறைவை சாக்காக வைத்து, ஊழியர் களின் சம்பளத்தை குறைக் கும் திட்டத்தை விமான நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான சர்வதேச விமானப் பயணங்களை ரத்து செய்திருக்கும், பொதுத் துறை விமான நிறுவனமான, ‘ஏர் இந்தியா’, தனது ஊழியர்களுக்கான சம்பளத்தையும் 5 சதவிகிதம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 விமான ஓட்டிகளை, ‘ஏர் இந்தியா’ வேலையை விட்டு நீக்கப் போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

அதேபோல, ‘இண்டிகோ’ தனியார் விமான நிறுவனம் அதிகபட்சமாக 25 சதவிகிதம் வரை ஊதியக் குறைப்பை அறிவித்துள்ளது. “கொரோனா வைரஸ் தீவிரத்தால் விமானச் சேவை பாதிப்பைச் சந்தித்துள்ளது. விளைவாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் நிறுவனத்தின் நிதிநிலையை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் ஒருபகுதியாகவே பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டியநிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது” என்று இண்டிகோ நிறுவனத் தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறியுள்ளார்.
===
 

;