tamilnadu

img

ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு எதிராக நடப்பது சித்தாந்தப் போர்...இன்னும் 10 மடங்கு வீரியமாக போராடுவேன்

மும்பை:
கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ், கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு வில் உள்ள அவரது வீட்டின் முன்பு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கவுரி லங்கேஷ் படுகொலைப் பின்னணியில், ஆர்எஸ்எஸ்  சித்தாந்தம் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதேபோல், கவுரி லங்கேஷ், கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய ராகுல், பாஜக - ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு பல அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் தாக்கு தலுக்கு ஆளாகின்றனர்; சில நேரங்களில் கொலையும் செய்யப்படுகின்றனர் என்று கூறினார். 

இதையடுத்து, ஆர்எஸ்எஸ் நிர்வாகி யும் வழக்கறிஞருமான த்ருதிமான் ஜோஷி 2017-இல், மும்பை பெருநகர நீதி மன்றத்தில், சீத்தாராம் யெச்சூரி,  ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோ ருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர் ந்தார்.  இந்த வழக்கில் யெச்சூரியும், ராகுல் காந்தியும் வியாழனன்று மும்பை பெருநகர நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது மாஜிஸ்திரேட்டு, உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறீர்களா? என 2 பேரையும் பார்த்து கேட்டார். ஆனால் யெச்சூரியும், ராகுல் காந்தியும் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்ததுடன், வழக்கு மீதான விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார்.இதையடுத்து மாஜிஸ்திரேட்டு, தலா ரூ. 15 ஆயிரம் பிணை தொகையுடன் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கினார். மேலும் அடுத்து நடைபெறும் வழக்கு விசாரணை களின்போது நேரில் ஆஜர் ஆவதி லிருந்தும் விலக்களித்தார்.இதனிடையே, வழக்கு விசாரணை முடிந்ததும் நீதிமன்றம் முன்பாக, செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “இது ஆர்எஸ்எஸ் - பாஜக-வின் சித்தாந்தத் திற்கு எதிரான போர். இந்த போரில் நான்  ஏழைகள், விவசாயிகளுடன் நிற்கிறேன். நான் தாக்கப்படுகிறேன், ஆனாலும், நான் இந்த தாக்குதல்களை ரசிக்கிறேன்” என்று கூறினார்.  மேலும், இந்த தாக்குதல்கள் தொடரும் என்று கூறிய ராகுல் காந்தி, “ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு எதிராக, கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்ததை விட 10 மடங்கு வீரியமாக போராடுவேன்” என்றும் தெரிவித்தார்.
=====

;