உலகளவில் மக்கள் பெரும்பாலாக பயன் படுத்தும் இணையதள செயலி பேஸ்புக்.பேஸ்புக்கில் வரும் செய்திகளை மக்கள் உண்மை என்று கருதுவதும் ,அதை பகிர்வதும் மக்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.ஆனால் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனற உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியது வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கை.
இந்த செய்தி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அத்தகைய அச்சத்திற்கும் ,அச்சுருத்தளுக்கும் காரணம் பாஜக(ஆர்.எஸ்.எஸ்).
வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையின் அடிப்படையில் ,காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது” என கூறினார்.அதன் மூலம் போலி செய்திகளையும் , வெறுப்பையும் பரப்பி மக்கள் மனதை மாற்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது என கூறினார். இந்த வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையின் மூலம் இந்திய சமூக ஊடகங்கள் , பாஜகவுக்கு உதவியதன் மூலமே 2019 பொதுத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தற்போதை பேஸ்புக்கின் இந்தியத் தலைவர் மற்றும் சமூக ஊடக நிறுவன பொதுக் கொள்கை இயக்குநர் அன்கி தாஸ் . ஆனால் அன்கி தாஸ் பாஜகவை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது .இதற்கு ஆதாரம் அங்கி தாஸின் சகோதரி ரஷ்மி தாஸ் இந்தியாவின் இந்துத்துவா படையணியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்பது தான் . ரஷ்மி தாஸ் முன்பு டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபிக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திங்களன்று தெரிவித்த ரஷ்மி தாஸ், ‘நாங்கள் சகோதரிகள் மிகவும் கடுமையான ஊழியர்கள்’ என்று தனது சகோதரியைப் பற்றி பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் பேஸ்புக் ஊழியர்களின் குழு ஒன்று, தனது திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது .இதன் அடிப்படையில் அங்கி தாஸின் கீழ் இயங்கிய குழு ‘முஸ்லீம் எதிர்ப்பு மதவெறி’ குறித்த சில கடுமையான மாறுபட்ட கொள்கைகளை பரப்பியது தெரியவந்துள்ளது.
இன்று வெளியான ராய்ட்டர்ஸின் ஒரு அறிக்கையில் , 11 ஊழியர்களால் பேஸ்புக்கின் தலைமைக்கு எழுதப்பட்ட ஒரு திறந்த கடிதம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.இந்த கடிதத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் அங்கி தாஸ் முஸ்லீம்-விரோத மதவெறியை ”பரப்புவதாக தெரியவந்துள்ளது.
பாஜகவுடன் பேஸ்புக்கிற்க்கு உள்ள தொடர்புகளை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கை வெளியிட்ட பின்னர் ,அங்கி தாஸ் அச்சத்தை ஏற்படித்தியுள்ளது.
“பேஸ்புக் சார்பாக இந்தியத் தலைவர் தாஸ், [இந்தியப் பிரதமர் நரேந்திர] மோடியின் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் மீறல்களைத் தண்டிப்பது நிறுவனத்தின் வணிக வாய்ப்புகளை சேதப்படுத்தும் என்று ஊழியர்களிடம் கூறினார்.” என வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதை குறித்து பேஸ்புக் நிறுவன தலைவர் ஜூக்கர் பெர்க் கூறுகையில் “வன்முறையைத் தூண்டும் வெறுக்கத்தக்க பேச்சை நாங்கள் தடைசெய்கிறோம்”, யாருடைய அரசியல் நிலைப்பாட்டையும் அல்லது கட்சி இணைப்பையும் பொருட்படுத்தாமல் உலகளவில் நாங்கள் செயல்படுகிறோம் என்று கூறினார்.
ஆனால் இது அப்பட்டமான பொய் என்பது அங்கி தாஸ் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் கைக்கூலிகள் என்று தற்போதைய சூழ்நிலையில் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கைகளின் மூலம் மக்களுக்கு தெரியவருகிறது என்பது நிதர்சனமான உண்மை.