tamilnadu

img

3 மாதத்தில் ரூ.32,000 கோடி வங்கிகளில் மோசடி!

புதுதில்லி:
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும், நாட்டிலுள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் ரூ.32 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பொதுத்துறை வங்கிகளில்நடைபெற்ற பண மோசடி வழக்குகள் குறித்து, சந்திரசேகர் கவுர்என்பவர், தகவல் அறியும்உரிமைச்சட்டத்தின் மூலம் கேள்விஎழுப்பியிருந்தார். அதற்குத்தற்போது பதில் கிடைத்துள்ளது.அதில், “ஏப்ரல் முதல் ஜூன்வரையிலான மூன்று மாதங்களில், 18 பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 31 ஆயிரத்து898 கோடியே 63 லட்சம் ரூபாய்அளவிற்கு மோசடி நடந்துள் ளது; இந்த மோசடிகள் தொடர்பாக 2 ஆயிரத்து 480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மட்டும் 12 ஆயிரத்து 12 கோடியே 77 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாகவும் 1,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.அடுத்ததாக அலகாபாத் வங்கியில் ரூ. 2 ஆயிரத்து 855 கோடியே 46 லட்சம், பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 2 ஆயிரத்து 526 கோடியே 55 லட்சம், பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ. 2 ஆயிரத்து 297 கோடியே 5 லட்சம் என மோசடிகள் அரங்கேறியுள்ளன.

;