எல்கார் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் பி.வரவர ராவ் உட்பட அனைத்து மனித உரிமைகள் ஆர்வலர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச அளவிலான 145 பேராசிரியர்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் அறிக்கை வெளியிட்டள்ளனர்.
பொருளாதார மேதை நோம் சோம்ஸ்கி மற்றும் ஜான் பிரேமான் உட்பட 145 பேர் அனுப்பியுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கவிஞர், எழுத்தாளர், மனித உரிமைகள் ஆர்வலர் மற்றும் நீண்ட நெடுங்காலமாக உண்மையே பேசி வரும் பி.வரவர ராவ் அவர்கள் இதர 10 மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அவர்கள் நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவும் அச்சுறுத்தல் மற்றும் சுகாதாரமற்ற சூழல் இருப்பதால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.” இவ்வாறு அவர்கள் தங்கள் கடிதத்தில் கோரியுள்ளார்கள்.
(ந.நி.)