tamilnadu

img

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தலித் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டாக்கும் கேள்விகள்

கேந்திர வித்யாலயா பள்ளியின் கேள்வித்தாள் ஒன்றில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த வினாத்தாள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
சர்ச்சைக்குள்ளான வினாத்தாளில் தலித்துகள் என்gபதன் அர்த்தம் என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு விடைகளாக அந்நியர்கள், தீண்டத்தகாதவர்கள், நடுத்தரவர்க்கத்தினர். உயர்வகுப்பினர் என்று கொடுக்கப்பட்டுள்ளலது. 
இதேபோல்  பொதுவாக முஸ்லீம்களின் பண்பு என்ன என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு முஸ்லீம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அவர்கள் சைவ உணவு பழக்கத்தினர், அவர்கள் நோன்பு இருக்கும் காலங்களில் எப்போதும் தூங்குவதில்லை. இது எல்லாம் என்று மூன்று விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. 
அதேபோல் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் எந்த சமூக வகுப்பை சேர்ந்தவர் என்ற கேள்விக்கு 
பணக்காரர், ஏழை, தலித்,பொருளாதாரம் என்று 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கேள்விகள் குழந்தைகளின் மாணவ பருவத்திலேயே சாதி மத ரீதியான பிரிவினையை ஊக்கப்படுத்தவே செய்யும் என்று கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

;