tamilnadu

img

புன்னப்புரா- வயலார், மேனாசேரி, மராரிகுளம் தியாகிகளுக்கு ஒருவார நினைவேந்தல் நிகழ்வுகள்...

புன்னப்புரா:
புன்னப்புரா-வயலார் தியாகிகளின் 74 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி வார விழா நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் நடைபெற்றன.

தொழிலாளர் வர்க்கத்தின் வீரஞ் செறிந்த இயக்கத்தை நினைவுகூரும் விதமாக மலர்கள் தூவியும் முழக்கமிட்டும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. புன்னப்புரா தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர் ஜி.சுதாகரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். நாசர்,சிபிஐ மாவட்ட செயலாளர் டி.ஜே.ஆஞ்சலோஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஆரிப் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.நினைவேந்தலின் போது போராட்ட நாயகன் வி.எஸ்.அச்சுதானந்தனின் செய்தியை கே மோகன்குமார் வாசித் தார். தியாகிகள் தீபம் ஏந்திய தொடர் ஓட்டம் புன்னப்புரா தியாகிகள் மண்டபத்திலிருந்து பரவூர் தியாகிகள் மண்டபம் வரை நடைபெற்றது.  சிபிஎம் மாநிலசெயலாளர் கொடியேரி பாலகிருஷ் ணன், சிபிஐ மாநில நிர்வாககுழு உறுப்பினர் முல்லக்கர ரத்னாகரன் ஆகியோர் ஆன்லைன் உரைகளை நிகழ்த்தினர். பெரிய சுடுகாட்டில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

வாரவிழாவின் ஒரு பகுதியாக, மேனாசேரி தியாகிகள் மண்டபத்தில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் ஆர்.நாசர், மனு சி புலிக்கல், தினகரன், என்.எஸ்.சிவபிரசாத், பி.கே.சாபு,என்.பி. ஷிபு உள்ளிட்ட ஏரானமானோர்அஞ்சலி செலுத்தினர். நினைவேந்தலின் ஒரு பகுதியாக, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.ரஜீவ் ‘ஊடகபயங்கரவாதம்’ குறித்தும், சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் பி.பிரசாத் ‘புன்னப்புரா-வயலார் மற்றும் தொழிலாளர் வர்க்கம்’ குறித்தும் காணொலி காட்சி மூலம் உரை நிகழ்த்தினர்.

மராரிகுளம் தியாகிகள்
திங்களன்று மராரிகுளம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மராரிகுளம் தியாகம் நாட்டின் போராட்டவரலாற்றில் ஒரு வீரம் செறிந்த அத்தியாயமாகும். 1938 அக்டோபர் 25அன்று புன்னப்புராவில் துப்பாக்கிச் சூடு நடந்தபின்னர், மராரிகுளம் பாலத்தைக் கடந்து,சாலை மூலம் வயலார் செல்ல பிரிட்டிஷ்இந்திய ராணுவ துருப்புக்கள் முடிவுசெய்தன. இராணுவம் உள்ளே நுழைவதைத் தடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் மராரிகுளம் பாலத்தை இடித்தனர். ராணுவத் தலைவர்கள் பாலத்தை மீண்டும் கட்டினர். புதிய பாலத்தை இடிக்கவும் தொண்டர்கள் திட்டமிட்டனர். இதை உணர்ந்த இராணுவம் துப்பாக்கி முனையில் தொண்டர்களை எதிர்கொள்ள பதுங்கியிருந்தது. மீண்டும்பாலத்தை இடிக்க மக்கள் அணிவகுத்துச் சென்றனர். அப்போது அவர்கள்மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடுநடத்தினர். இதில் 6 பேர் கொல்லப் பட்டனர். பலர் காயமடைந்தனர். பலர்ஊனமுற்றனர். துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானவர்களை ராணுவத்தினர் பாலம் அருகே புதைத்தனர். புரட்சிகர கிராமமான மராரிகுளம் அந்த துணிச்சலான தேசபக்தர்களின் நினைவைப் புதுப்பித்து வருகிறது.

கம்யூனிஸ்ட்டுகளின் பங்கிற்கு மகத்தான சான்று
விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் என்ன பங்கு வகித்தார்கள் என்ற கேள்விக்கு புன்னப்புரா-வயலார் போராட்டமே பதில் என்று சிபிஎம் கேரளமாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.இந்த போராட்டத்தை சுதந்திரப் போராட்டமாக ஏற்க காங்கிரஸ் தயாராக இல்லை. இறுதியில் அவர்கள் மக்களிடையே தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் விளைவாக, கம்யூனிஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் 1957 இல் கேரளாவில் ஆட்சிக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் வரலாற்றாசிரியர்கள் புன்னப்புரா-வயலார் போராட்டத்தை ஒரு சுதந்திர போராட்டம் அல்ல என்றுசித்தரிக்க முயற்சிக்கின்றனர். பிரிட்டிஷ்அரசாங்கம் தொழிலாளர்கள் - விவசாயிகளிடம் மேற்கொண்ட அதே அணுகுமுறையை மோடி அரசு எடுத்து வருகிறது. மோடி அரசாங்கம்  சர்வாதிகார முறையில் செயல்படுகிறது. மத சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும், உயிருக்கும் பாதுகாப்பற்ற நாடாக இந்தியாவை பாஜக உருவாக்கியுள்ளது என்றார் கோடியேரி.