tamilnadu

img

புதுச்சேரி மத்திய பல்கலை.யில்...

இதுகுறித்து பல்கலைகழக வட்டாரங்களில் விசாரித்தபோது, வருகின்ற (பிப்.26)பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது; அந்த விழாவில்  குடியரசு துணைத் தலைவர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க இருப்ப தாகவும், அற்காகவே துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப் பட்டாலும் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கவே துணை ராணுவபடை குவிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் உலா வரு கின்றன.

போராட்டத்திற்கு கல்லூரி  மாணவர்கள்  ஆதரவு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக கட்டணக் கொள்ளையை கண்டித்து தொடர்ந்து 19வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர் பேரவைக்கு ஆதரவு தெரிவித்து, புதுச்சேரி மாநிலம் தழுவிய  மாணவர்கள் வகுப்புபுறக்கணிப்பு போராட்டம் திங்களன்று (பிப்.24) நடைபெற்றது. புதுச்சேரியிலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்பு களை புறக்கணித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காலாப்பட்டிலுள்ள அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக் கணித்து அண்ணாசாலையிலுள்ள காம ராஜர் சிலை எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் கதிர் காமம் இந்திரா காந்தி கல்லூரி, பாரதிதாசன், லாஸ்பேட் தாகூர்ஆர்ட்ஸ் உள்ளிட்ட கல்லூரி மாண வர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய மாணவர் சங்கம், மாணவர் பெருமன்றம், திமுக மாணவர் அணி,புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு ஆகிய பல்வேறு மாணவர், வாலிபர் அமைப்புகள் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகைத் தரும் குடியரசு துணைத் தலைவருக்கு இந்த அமைப்புகள் சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

;