tamilnadu

img

தனியார்மய முடிவுகள் தொழிலாளர்களுக்கு எதிரானது!

புதுதில்லி:
நாட்டின் 8 பொதுத்துறை நிறுவனங்களையும் முழுமையாக தனியார்மயம் ஆக்கப்போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.இதற்கு இடதுசாரி தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாஜகவின் குருபீடமான ஆர்எஸ்எஸ் அமைப்பும் பின் தொழிற்சங்கப் பிரிவான ‘பாரதிய மஸ்தூர் சங்’கும் (பிஎம்எஸ்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

“ரூ.20 லட்சம் கோடிபொருளாதாரத் திட்டம்தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமையன்று 4-வது நாளாக சில அறிவிப்புகளை வெளியிட்டார். இது தேசத்திற்கே துயரமான நாள்”என்று பிஎம்எஸ் பொதுச்செயலாளர் விர்ஜேஸ் உபாத் யாயா கூறியுள்ளார். “மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு மாற் றமும் தொழிலாளர்களை பாதிக்கக் கூடியதாக உள்ளது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளது” என்று கூறியுள்ள உபாத்யாயா, “தங்களது முடிவுகள் தொடர்பாக,தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க மத்திய அரசு வெட்கப்படுகிறது” என்றும் விமர்சித்துள்ளார்.சமூக தாக்கங்கள் தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையையும் மத்திய அரசுநடத்துவது இல்லை. ஜனநாயகத்தின் அடிப்படை என்பதே சமூக உரையாடல் கள்தான். ஆனால் மத்தியஅரசு அதனை நிராகரித்துவிட்டது என்றும் உபாத்யாயா குற்றம் சாட்டியுள்ளார்.

;